Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உக்ரைனை ஊடகங்கள் சதி என பரவும் வீடியோவின் பிண்ணனி என்ன தெரியுமா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-03-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :விலை போயுள்ள உக்ரைன் ஊடகங்கள் மக்களை திசை திருப்பும் ஊடக சதி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவ

    INTRO :
    விலை போயுள்ள உக்ரைன் ஊடகங்கள் மக்களை திசை திருப்பும் ஊடக சதி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” அரங்கேற்றப்படும் ஊடக சதி 

    உக்ரைன் செய்தியாளர் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு பிணம் தனது மேல் போர்த்தியிருந்த பாலிதீன் ஷீட்டை சரிசெய்கிறுது. ஆக அங்கும் விலைபோய் மக்களை திசை திருப்பும் ஊடக சதி செயல்படுகிறது “ என இம் மாதம் 17 ஆம் திகதி (17.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவில் இருந்து ஸ்கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

    அப்பொழுது இந்த வீடியோ இந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    oe24.at| Archived Link

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உக்ரைனை ஊடகங்கள் சதி என பரவும் என பகிரப்படும் வீடியோ ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் காலநிலை மாற்றம் தொடர்பாக நடைப்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உக்ரைனை ஊடகங்கள் சதி என பரவும் வீடியோவின் பிண்ணனி என்ன தெரியுமா ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-03-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.