Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு ; மக்கள் உணவுக்கு அலைபாய்கிறார்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-28
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO :சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் உணவுக்கு அலைபாய்வதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிற

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் உணவுக்கு அலைபாய்வதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுவதாகவும்,மக்கள் உணவுக்கு அலைபாய்கிறார்கள்! ” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (19.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    நாம் இதில் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று, சவுதியில் மக்கள் உணவுக்காக அலைபாய்ந்தனரா..? மற்றும் இந்த காணொளி எந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது என ஆய்வினை மேற்கொண்டோம்.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சவுதி அரேபியாவில் உணவு தட்டுபாடு என்றால் அது குறித்து சர்வதேச ஊடகங்கள் மற்றுமல்ல பல பிரபலமான தன்னார்வ நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இது குறித்து தகவல்களை வெளியிட்டிருப்பர். 

    நாம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் போது அவ்வாறான எவ்விதமான செய்தி அறிக்கையிடல் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

    காணொளி எச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது ?

    சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்ற காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி டிக்டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Al-Shara என்ற பகுதியில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் போது என குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Tiktok Link

    மேலும் நாம் குறித்த இரு காணொளிகளை நாம் ஆய்வு செய்தபோது, அந்த காணொளிகள் ஒத்திருந்தமை கண்டறியமுடிந்தது.

    பல்பொருள் அங்காடி அமைவிடம்

    நாம் கூகுள் மேப்பினை பயன்படுத்தி குறித்த பல்பொருள் அங்காடியின் பெயரினை  பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, அதே பகுதியில் குறித்த பல்பொருள் அங்காடியின் பெயரில் பல்பொருள் அங்காடி இருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் இருந்த பயனாளர்களின் புகைப்பட பதிவுகளை ஆய்வு செய்தபோது, குறித்த காணொளியினை ஒத்த புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதற்கமைய காணொளியில் உள்ள பல்பொருள் அங்காடி தான் இது என்பது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் நாம் தேடலின்போது, குறித்த பல்பொருள் அங்காடியானது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி திறக்கப்பட்டதினை காட்டும் விதமாக குறித்த பல்பொருள் அங்காடியின் வாயிலில் பல பேர் வரிசையாக காத்திருந்தமைக்கான காணொளி பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    அத்துடன் பல சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்களும் குறித்த காணொளி தொடர்பாக ஆய்வறிக்கைகள் மேற்கொண்டிருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு காரணமாக மக்கள் உணவுக்கு அலைபாய்கிறார்கள் என பகிரப்படும் காணொளி தவறானது என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.