
INTRO :
பாராளுமன்ற உறுப்பினரான நாமலுக்கு ஆதரவாக “Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “Go home Anura ah 😂😝
Full video first comment ” என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (07.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இணையத்தில் பகிரப்படும் குறித்த காணொளியில் நாமலின் கைதுக்கு பின்னர் திரண்ட ஆதரவாளர்கள் GO HOME ANURA என கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சம்பவம் இடம்பெற்று இருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும் எனவே நாம் அது குறித்தான ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான செய்திகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் போது அணித்திரண்ட மக்கள் இவ்வாறு கோஷமிட்டனரா என ஆய்வினை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிமன்றத்தில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்ட காணொளியை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம் , குறித்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான வார்த்தைகள் பிரயோகப்படுத்தி கோஷம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
நாம் குறித்த காணொளியினை அவதானித்தபோது, இது கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி கைது செய்த போது எடுக்கப்பட்ட காணொளியை ஒத்திருந்தமை காணக்கிடைத்தது.
எனவே சமூகவலைத்தளத்தில் தற்போது பகிரப்படும் குறித்த காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த காணொளி கடந்த வருடம் முன்னால் ஜனாதிபதி கைதின் போது அணித்திரண்ட அவரின் ஆதரவாளர்களால் கோஷமிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாமலுக்கு ஆதரவாக “Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரிவித்து பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
“Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பகிரப்படும் பழைய காணொளி!
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



