Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவத்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-10
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : பாராளுமன்ற உறுப்பினரான நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவத்தார் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    பாராளுமன்ற உறுப்பினரான நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவத்தார் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “களத்திலிறங்கி விட்டார்  #விமல் #வீரவன்ச….!” என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (06.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவத்தாக எந்த பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கவில்லை.

    விமல் வீரவன்சவின் கருத்து

    விமல் வீரவன்சவை தொடர்புக்கொண்டு வினவியபோது,நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகின்ற தகவல் முற்றிலும் தவறான தகவல் என எமக்கு உறுதிப்படுத்தினார்.

    அநுராதபுர பேரணியில் கலந்து கொள்வரா..?

    மேலும் அவர் அண்மையில் மேற்கொண்ட ஊடகசந்திப்பில் அநுராதபுரத்தில் நடைப்பெறவுள்ள பேரணியில் கலந்துக்கொள்வீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் இது குறித்து எனது கட்சி உறுப்பினருடன் கலந்தாலோசித்து தான் முடிவினை தெரிவிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இதற்கு முன்னரே தாம் அறிவத்ததாகவும், வருகின்ற தினங்களில் கட்சி கூட்டத்தில் இதுதொடர்பாக, கலந்தாலோசித்து தமது முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவித்தாக பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நாமலை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என விமல் வீரவன்ச தெரிவத்தாரா?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.