Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல்கல் என பரவும் வீடியோவின் உண்மை தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-08-31
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு தளத்தை அல்லது பிளாட்டை நாம் விரும்பிய வெவ்வேறு திசையில் நகர்த்திக் கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ந

    INTRO :
    துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு தளத்தை அல்லது பிளாட்டை நாம் விரும்பிய வெவ்வேறு திசையில் நகர்த்திக் கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” எப்படி துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல் கல்….👏 “ என ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி (12.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    அப்போது இந்த கட்டிடம் AT&T யின் தலைமை காரியாலயம் என்று தெரியவந்தது. மேலும், அந்த கட்டிடத்தின் வீடியோவும் கிடைத்தது. கட்டிடத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒளிர் திரை அமைத்து 3டி காட்சிகளை வெளியிட்டு வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    codaworx.com I Archived link

    https://twitter.com/ATTDistrict/status/1547991189399281667


    கட்டிடங்களில் 3டி காட்சிகளை ஏற்படுத்துவது, விஆர் – மீடியா ஆர்ட் காட்சிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருவகின்ற

    Sila Sveta என்ற நிறுவனம் இந்த 3டி காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் AT&T Discovery District கட்டிடத்தில் செய்து வரும் சில 3டி காட்சிகளின் வீடியோவையும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

    இணையத்தில் வைரலாகி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அதன் சமூக ஊடக பக்கங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் AT&T Discovery District என்ற டுவிட்டர் பக்கத்தில் அந்த கட்டிடத்தில் ஒளிர் திரையில் வெளியான வேறு சில 3டி காட்சிகளை காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த கட்டிடமும், AT&T headquarters கட்டிடமும் ஒன்று தான் என நாம் கூகுள் மேப்பினை வைத்து ஆய்வு செய்த போது கண்டறியப்பட்டது.

    Google Street View

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல்கல் என தலைப்பிட்டு சுழலும் கட்டிட தொகுதியினை வடிவமைத்துள்ளதாக பரவுகின்ற வீடியோ அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் நகரில் உள்ளது என்பது உறுதியாகிறது. மேலும், ஒரு தளம் அல்லது ஒரு தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது என பரவுகின்ற வீடியோ 3டி – விஆர் ஒளிர் திரை காட்சியில் திரும்புகிறது என கண்டறியப்பட்டது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல்கல் என பரவும் வீடியோவின் உண்மை தெரியுமா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-08-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.