Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    யேமன் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி தாக்குதல் என பரவும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-26
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : யேமன் தலைநகர் சனா பகுதியில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    யேமன் தலைநகர் சனா பகுதியில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “யேமன் தலைநகர் சனா பகுதியில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தத் தாக்குதல்கள் ஹூதி அமைப்பின் இராணுவ தலைமையகங்களை இலக்காகக் கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    #SaudiArabia #Yemen #Sanaa #Houthis” என இம் மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (21.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    யேமன் தலைநகர் சனா பகுதியில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் மேற்கொண்டிருந்தால் அது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி அறிக்கையிடலினை மேற்கொண்டு இருக்கும், ஆகவே அவ்வாறான  செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகியமைக்கான ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

    மாறாக யேமன் நாட்டை சேர்ந்த ஹூதி அமைப்பானது ரியாத் நகரினை நோக்கி தாக்குதல் மேற்கொண்டுள்ளமைக்கான செய்திகள் எமக்கு காணக்கிடைத்தது.BBC News

    ஆகவே இணையத்தில் பகிரப்படுகின்ற குறித்த காணொளியினை நாம் நன்கு அவதானித்தபோது, அதில் சில காட்சிகள் இயற்கைக்கு மாறாக காணப்பட்டமை காணக்கிடைத்தது.

    அதில் காணப்படும் வெடிப்புகள் மற்றும் புகையின் அமைப்பு, இயற்கையான வெடிப்புகளின் தோற்றத்துடன் ஒத்துப்போகவில்லை.

    ஆகவே இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழ நாம் இதனை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த ஆய்வின் போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சயேமன் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி தாக்குதல் என பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: யேமன் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி தாக்குதல் என பரவும் காணொளி உண்மையா?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.