Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஜாதி வேண்டாம் போடா அச்சிடப்பட்ட டிஷர்ட் அணிந்தாரா யுவன்?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-09-14
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா ஜாதி வேண்டாம் போடா என்று வடிவமைக்கப்பட்ட டிஷர்ட்டினை அணிந்துள்ளதாக ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின்

    இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா ஜாதி வேண்டாம் போடா என்று வடிவமைக்கப்பட்ட டிஷர்ட்டினை அணிந்துள்ளதாக ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link

    Faizal Amade என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஜாதி வேண்டாம் போடா!

    சூப்பர் யுவன் ராஜா” என்று இம் மாதம் 09 ஆம் திகதி  (09.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, தற்போது ஜாதி வேண்டாம் போடா என்று பகிரப்படும் யுவன் படத்தினை ஒத்த ஓர் புகைப்படம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Instagram link | Archived link 

    குறித்த புகைப்படத்தினையும் இணையத்தில் தற்போது பகிரப்படும் புகைப்படத்தினையும் ஒப்பிட்டு பார்த்தோம்.

    யுவனின் இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்த புகைப்டத்தினை எடுத்து அவர்கள் அதை எடிட் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமது ஆய்விலிருந்து தெரியவந்தது.

    மேலும் யுவன் சங்கர் ராஜா தமிழ் மொழி சர்பாக ஏதும் பதிவேற்றம் செய்துள்ளாரா என்று தேடியவேளையில் அவர் கடந்த 5 ஆம் திகதி (05.09.2020) I am a தமிழ் பேசும் Indian என்ற சொற்பதம் பதிந்த ஒரு டிஷேர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளமையும் காணக்கிடைத்தது.

    Instagram link | Archived link

    இதற்கமைய யுவன் சங்கர் ராஜா ” ஜாதி வேண்டாம் போடா ” எனும் வாசகம் அச்சிடப்பட்ட டிஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது. 

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜாதி வேண்டாம் போடா அச்சிடப்பட்ட டிஷர்ட் அணிந்தாரா யுவன்?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-09-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.