
INTRO :
மக்கா நகரம் மீதான தாக்குதல் என ஒரு காணொளி சமூகவலைத்தளத்தில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “மெக்கா நகரம் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு!
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ட்ரோனை, வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
#Mecca #SaudiArabia #Houthi #MiddleEast #geetamil ” என இம் மாதம் 16 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (16.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இணையத்தில் பகிரப்படும் குறித்த காணொளியின் சில பகுதிகளை நாம் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, அந்த காணொளி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி (2025.09.12) Belqees TV என்ற யெமன் செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், சவுதி அரேபியாவின் Inside The Haramain என்ற ஊடகத்தின் X கணக்கின் பதிவின்படி, 2025 செப்டம்பர் 12 அதிகாலை மதீனா நகரில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் ஒன்று இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற பதிவு அவர்கள் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
கடந்த 15 ஆம் திகதி (15.09.2026) அன்று மக்காவின் மீது தாக்குதல் நடக்கவுள்ளதாகவும், பாதுகாப்பாக மக்களை இருக்க கூறி வெளியிடப்பட்ட செய்திஅறிக்கை காணக்கிடைத்தது.
அத்துடன் குறித்த ஆபத்து விலகிவிட்டதாகவும், இருப்பினும் எல்லோரும் கவனமாக இருக்குமாறு அவர்களின் உத்தியோகப்பூரவ் எக்ஸ் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மக்கா நகரம் மீதான தாக்குதல் என பகிரப்படும் காணொளி தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



