
INTRO :
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் GoHomeGota என வானில் ஒளி எறிகருவி மூலம் ஒளிரவிடப்பட்டதாக புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” காலிமுகத்திடலில் அதிரடி காட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள்! வானில் ஒளிரும் GotaGoHome! https://tinyurl.com/yycj6o6a “ என இம் மாதம் 19 ஆம் திகதி (19.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினை பதவி விலகுமாறி கோரிக்கையினை முன்வைத்து காலிமுகத்திடலில் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 17 ஆம் திகதி ஒளி எறிகருவி (Projectors) உதவினை கொண்டு பழைய பாராளுமன்றத்தின் மீது அரசாங்கத்திற்கு எதிராக தனது ஆர்ப்பாட்டத்தினை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொண்டனர். வாசிக்க
அது போன்று தற்போது வானில் ஒளிரவிடப்பட்டுள்ளதாக பகிரப்படும் புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள மியூசியமான Museum of Contemporary Arts (MCA) அருகில் வானத்தில் ” Beware of the God ” என்ற ஒளிரவிடப்பட்ட போது புகைப்படக் கலைஞரான Deborah Kelly எடுத்த புகைப்படம் என கண்டறியப்பட்டது.

கேமராவில் பதிவான குறித்த புகைப்படத்தின் விவரங்களை அலெக்ஸ் கெர்ஷா என்பவரால் Flicker இல் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக வெளியாகிருந்த வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், வானில் ஒளி எறிகருவி மூலம் GoHomeGota என ஒளிர விட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் என பரவும் புகைப்படங்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:வானில் ஒளி எறிகருவி மூலம் GoHomeGota என ஒளிர விட்டனரா ஆர்ப்பாட்டக்காரர்கள்?
Fact Check By: S G PrabuResult: Altered


