Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உலகில் உயரமான மனிதர் மரணம் என வெளியான தகவல் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-02-09
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :உலகின் உயரமான மனிதர் மரணம் என ஒரு செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின்

    INTRO :
    உலகின் உயரமான மனிதர் மரணம் என ஒரு செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Ravisinger என்ற பேஸ்புக் கணக்கில் ” உலகில் உயரமான மனிதர் மரணம். உயரம் 9.4 வெயிட் 168kg முக்கியமான தகவலை ஷேர் பண்ணுங்கள் https://youtu.be/Ls24PUZ-zRw ” என இம் மாதம் 03 ஆம் திகதி  (03.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    குறித்த  தகவல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம்  அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அவர் பாகிஸ்தானில் இரண்டாவது உயர்ந்த மனிதன் என்று கண்டறியப்பட்டது.

    இவரை குறித்து நாம் மேலும் தேடிய போது, இவர் 7 அடி 9 அங்குலம் உயரம் உடையவர் என கண்டறியப்பட்டது. 

    tribune.com.pk | Archived Link 

    அதற்கமைய குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் இவர் 9.4 உயரம் என்பது பொய்யான கருத்தாகும். உலக சாதனையாக இதுவரையில் உலகில் உயரமான மனிதரான பதிவாகியுள்ள ரோபட் வாட்லோ, 8 அடியும் 11.1 அங்குலமே அவரின் உயரமாக பதிவாகியுள்ளது.

    www.guinnessworldrecords.com| Archived Link

    அதில் பகிரப்பட்டுள்ள மற்றைய புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த போது,

    அதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் கொடி இந்தோனேசிய நாட்டின் உடையது, அதற்கமைய நாம் மேற்கொண்ட தேடலின் போது, இந்தோனேசிய மொழியில் சமூகவலைத்தளங்களில் பதிவாகியிருந்த புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    Link 1| Link 2 | Link 3

    நாம் Naseer Soomro குறித்து தேடியபோது, 2019 ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது. மேலும் பேஸ்புக்கில் குறித்த பதிவானது 2018 ஆம் ஆண்டு முதல் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    thenews.com.pk| Archived Link

    எமது குழுவினர் மேலும் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இதுவரையில் Naseer Soomro மரணமடைந்தமைக்கான எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவித்தலும் எமக்கு கிடைக்கவில்லை

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய உலகில் உயரமான மனிதர் மரணம் என பகிரப்படும் தகவல் போலியானது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உலகில் உயரமான மனிதர் மரணம் என வெளியான தகவல் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-02-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.