INTRO :
பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அடுத்து Flydubai பயணிகள் கொண்டாடியதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “வாழ்த்துக்கள் இஸ்றேலிய மக்களே🇮🇱🇮🇱🇮🇱💐💐💐
துணிவே உங்களுக்கு எப்போதும் துணை என்று கூறுவதை நீங்கள் நடுவானில் பறந்தபோது வந்த விபத்தின் ரணகளத்திலும் அதை சிறப்பாக நிரூபித்துள்ளீர்கள்.💥👌💪🏻” என இம் மாதம் 01 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (01.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai என்ற விமானத்தின் துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி குறித்த விமானத்தினை இயக்கிய விமான கேப்டனை தாக்கி குறித்த விமானத்தினை தரையில் மோத வைக்க முயற்சி கடந்த புதன்கிழமை (30.09.2026) அன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தின் போது விமானம் பத்திரமாக விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அதில் பயணித்த பயணிகள் உற்சாகத்தில் கொண்டாடிய விதம் என பரவும் காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டோம்.
இந்த ஆய்வின் போது, குறித்த காணொளி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதிலிருந்த செய்தி இணைய முகவரியை நாம் ஆய்வு செய்தபோது, இஸ்ரேலின்
கூடைப்பந்து வீரரான யாம் மடார் (Yam Madar) விமானத்தில் சக பயணிகளுடன் இசையை ஒலிபரப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி என பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த Flydubai தரையிறங்கிய பின்னர் அதிலிருந்து மக்கள் வெளியேறும் காட்சிகள் சில பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமை காணகிடைத்தது.
இது தொடர்பாக பல சர்வதேச உண்மை சரிபார்ப்பு நிறுவனங்களும் உண்மை கண்டறியும் ஆய்வறிக்கைகள் மேற்கொண்டுள்ளமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அடுத்து Flydubai பயணிகள் கொண்டாடியதாக பரவும் காணொளி கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேலின் கூடைப்பந்து வீரரான யாம் மடார் (Yam Madar) விமானத்தில் சக பயணிகளுடன் கொண்டாட்டத்தின் ஈடுப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



