Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-29
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவ


    INTRO :

    ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ கலவரங்களில் ஈடுபடும் மனித பன்றிகளை அடக்க உண்மையான பன்றிகளை களமிறக்கிய பிரெஞ்சு காவல்துறை!!

    முள்ளை முள்ளினால் எடுக்கமுடியும் என்ற உண்மையை புரிந்துகொண்டு,ஐரோப்பிய நாடுகளின் செம்மறி ஆடுகளை தினமும் விழுங்கிவிட்டு முறுக்கேறி அலையும் கலவரக்காறர்களை அடக்க பன்றிகளை களமிறக்கியுள்ளது ஐரோப்பிய பொலிசி படை!💥👈

    பன்றியை உண்ணாதவர்களைநோக்கி பன்றிகளை ஏவிவிட்டு கலவரக்காறர்களை தலைதெறிக்க ஓடவைக்கும் மாஸ்ரர்பிளான் என்றே இதை கூறமுடியும்.” என இம் மாதம் 24 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (24.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:

    குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று, பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த பன்றிகளை பிரான்ஸ் பொலிஸார் களமிறக்கியதாக பகிரப்படும் காணொளி உண்மையா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

    TikTok post spreading the claim
    TikTok 1 | @jaranor.films
    TikTok post spreading the claim
    TikTok 2 | @news_express01

    Fact Check (உண்மை அறிவோம்)

    பிரான்ஸில் அதிகரித்துவரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், பாடசாலைகளின் மோசமான நிலை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Link 1 | Link 2

    இந்த போராட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது குறித்து சர்வதேச ஊடகங்கள்
    செய்தி வெளியிட்டிருக்கும். நாம் அது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்தி அறிக்கையிடலும் எமக்கு கிடைக்கவில்லை.

    நாம் பிரான்ஸ் பொலிஸ் பிரிவினர் பயன்படுத்தும் விலங்கு எதுவென்று ஆய்வினை மேற்கொண்டபோது, அவர்கள் பயன்படுத்தும் விலங்கு, நாய் என்பதனை அறிய முடிந்தது..

    எனவே இணையத்தில் பகிரப்படும் குறித்த காணொளியின் காட்சிகளை நன்கு அவதானித்த போது, அதில் சில காட்சிகள் உண்மைக்கு புறம்பானதாக காணப்பட்டமையினால் நாம் இதனை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    இதன்போது நாம் பயன்படுத்திய மூன்று விதமான செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியின் பதில்களும் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்தியது.

    காணொளியில் செயற்கையாக உருவாக்கப்பட்டது (Synthetic Video) எனக் காட்டும் செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியின் முடிவு
    காணொளியில் AI கையொப்பங்கள் கண்டறியப்பட்டதாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியின் முடிவு
    காணொளி 99% செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனக் காட்டும் கண்டறியும் கருவியின் முடிவு

    மேலும் இந்த காணொளி தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, jaranor.films என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இந்த காணொளி கடந்த 22 ஆம்“ திகதி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமைக்கான அடையாளத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணக்கிடைத்தது.

    அத்துடன் குறித்த இன்ஸ்டெகிராம் கணக்கில் இதுபோன்று பல காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    பன்றிகளுடன் நிற்கும் பிரான்ஸ் பொலிஸாரைக் காட்டும் இன்ஸ்டாகிராம் காணொளியும் அதன் கருத்துப் பதிவுகளும்

    சில சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்களும் இது குறித்து ஆய்வினை மேற்கொண்டிருந்தமையும் காணக்கிடைத்தது. குறித்த ஆய்வின் போது இணையத்தில் பகிரப்படும் காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Link 1

    எனவே நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாக பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.