Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-10
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என  சமூக வலைத்தளங்கள் இரு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபே

    INTRO :
    இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என  சமூக வலைத்தளங்கள் இரு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த உலங்குவானூர்தியின் விபத்து காணொளி “ என இம் மாதம் 09 ஆம் திகதி (09.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இந்திய நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்…😓

    14 பேருடன் சென்ற, ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது – 10 பேர் சடலமாக மீட்பு. “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த வீடியோவில் ஒரு screenshot  புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.

    இந்த வீடியோவை தி டெலிகிராப் என்ற ஊடகம் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி யூடியூபில் பதிவிட்டிருந்தமை எமது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில், சிரியா நாட்டின் ஹெலிகாப்டரை புரட்சிப் படையினர் வீழ்த்தினர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான பல செய்திகள், வெளியிடப்பட்ட வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

    இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகள்
    aljazeera.com I Archived Link I thescottishsun.co.uk I Archived Link

    இரண்டாவதாக பகிரப்பட்டுள்ள வீடியோ தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த மாதம் 18 ஆம் திகதி (18.11.2021) அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான Mi 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதுபற்றி ஏஎன்ஐ வெளியிட்ட டுவிட் பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.


    Archived

    இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகள்

    ndtv.com| Archived  | indiatoday.in | Archived

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து என பகிரப்படும் இரு வீடியோக்களும் இரு வெவ்வேறு சம்பத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எமது இந்திய பிரிவினர் நடத்திய ஆய்வறிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. 

    FactCheck: பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ இதுவா?

    FACT CHECK: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து என்று பரவும் சிரியா வீடியோ!

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.