Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சாளக்கிராம கல் என பரவும் காணொளி உண்மையா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-07
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : நேபாளம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சாளக்கிராம கல் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்ட

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    நேபாளம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சாளக்கிராம கல் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ஒரே நேபாளம்… இரண்டு வெவ்வேறு காட்சிகள்!

    ஒருபுறம் இயற்கையின் கோரத் தாண்டவம்…

    நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பல உயிர்களை காவு கொண்ட செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில்…

    மறுபுறம் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆன்மிக நிகழ்வு!

    நேபாளத்தின் புனிதமான முக்திநாத் – கண்டகி நதியில், பிரம்மாண்டமான சாளக்கிராமம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    வைணவ மரபில் சாளக்கிராமம் திருமாலின் திருவுருவமாகப் போற்றப்படும் புனிதமான கல்.

    அதனால், இந்த நிகழ்வை பல பக்தர்கள்…

    துயரத்தின் நடுவிலும் இறைவன் அருள் இருக்கிறது!

    இது ஒரு தெய்வீக அறிகுறி!

    என்ற ஆன்மிக நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

    இது உண்மையிலேயே ஒரு தெய்வீகச் சம்பவமா என்பதை விட, துயரத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் ஒரு ஆன்மிகச் சின்னமாக பலர் இதைப் பார்க்கின்றனர்.

    வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்…

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர பிரார்த்திப்போம்.

    இறைவன் சோதித்தாலும்… நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே!

    ஓம் நமோ நாராயணாய!

    👇 பக்தர்கள் அனைவரும் “ஓம் நமோ நாராயணாய” என்று கமெண்ட் செய்யுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்க இறைவன் அருள் புரியட்டும்.

    இந்த ஆன்மிகப் பதிவை பக்தர்களுடன் SHARE செய்யுங்கள்.

    #Muktinath #Shaligram #Saligram #GandakiRiver #Nepal #Vishnu #Narayana #SanatanaDharma #HinduDharma #NepalFlood #Spirituality #OmNamoNarayanaya #முக்திநாத் #சாளக்கிராமம் #கண்டகிநதி #நேபாளம் #திருமால் #நாராயணன் #சனாதனதர்மம் #ஆன்மிகம் #ஓம்நமோநாராயணாய #TrendingTamil #ViralTamil #TamilDevotional

    ” என கடந்த மாதம் 31 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (31.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று நேபாள வெள்ளத்தின் போது பிரம்மாண்டமான சாளக்கிராமம் கல் கண்டெடுக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும். ஆயினும், நாம் மேற்கொண்ட ஆய்வின் போது அவ்வாறான செய்திகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

    நேபாளத்தின் புனிதமான முக்திநாத் – கண்டகி நதியில், பிரம்மாண்டமான சாளக்கிராமம் கல் கண்டெடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளியில், சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ஆய்வு செய்தபோது, இது கடந்த 2026 மே மாதம் எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    குறித்த காணொளி பதிவில் பதிவிட்டுள்ளவாறு நேபாளத்தில் உள்ள Jomsom – Gharapjhong என்ற இடத்தில் உள்ளூர் நிர்வாகம் சார்பாக மிகப்பெரிய சாளக்கிராம கல்லில் செதுக்கப்பட்ட சக்கரத்தை Sringeri Sharada Peetham பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த துவக்க விழாவில் சாரதா மடத்தின் தலைமை சங்கராச்சாரியார் கலந்துகொண்டுள்ளார்.

    குறித்த சாளக்கிராம கல்லில் செதுக்கப்பட்ட சக்கரத்தை திறந்து வைத்தமை தொடர்பாக இணையத்தில் பதிவாகிய செய்தியும் எமக்கு கிடைக்கப்பெற்றது. அச்செய்தியின் அடிப்படையில், இது ஒரு மனித வடிவமைப்பு என்பது உறுதியானது. Link

    சாளக்கிராம கல் என்றால் என்ன..?

    சாளக்கிராம கல் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முந்தைய காலத்தில் வாழ்ந்த அமோனைட் (Ammonite) எனப்படும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் (Fossils) ஆகும். 

    இதுவே சாளக்கிராம கல் ஆன்மீக ரீதியில் பார்த்தால், ) ஆகும். ஆன்மீகத்தில் இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது. 

    Google Map கொண்டு ஆய்வு

    கூகுள் மேப் கொண்டு ஆய்வினை மேற்கொண்டபோது, நேபாள வெள்ளம் ஏற்பட்ட பகுதியும், குறித்த சாளக்கிராம கல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியும் இடையில் சுமார் 400Km தூரம் காணப்பட்டது.

    மேலும் நேபாள வெள்ளத்தினால் asuwa, Nuwakot, Dhading, Gorkha and Tanahun மாவட்டங்கள் பதிக்கப்பட்டது. ஆயினும் Jomsom மலைபகுதி Mustang மாவட்டத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சாளக்கிராம கல்  என பரவும் காணொளிக்கும்  நேபாளம் வெள்ளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாளம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சாளக்கிராம கல் என பரவும் காணொளி உண்மையா..?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-07

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.