Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக, அவரின் டுவிட்டர் பதிவுடன் தின மலர் பத்திரிக்கையில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சில சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்

    INTRO :
    இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக, அவரின் டுவிட்டர் பதிவுடன் தின மலர் பத்திரிக்கையில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சில சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை மக்களுக்கு அழைப்பு “ என இம் மாதம் 21 ஆம் திகதி (21.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் டுவிட்டர் கணக்கினை ஆய்வு செய்த போது இணையத்தில் பகிரப்படுவதை போன்ற எவ்விதமான டுவிட் பதிவினையும் அங்கே காண முடியவில்லை.

    இதனை மேலும் உறுதி செய்து கொள்ளும் நிமிர்த்தமாக இந்திய தூதரகத்தினை நாம் தொடர்புகொண்ட போது, இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியான, நெருக்கமான, தொன்மையான உறவை பாதிக்கும்வகையில், அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் தீய நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது போன்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை எனவும் எமக்கு தெரிவித்தனர்.

    நாம் குறித்த வைரல் டுவிட் பதிவினை நன்கு அவதானித்தபோது, அதில் இலக்கண பிழைகள் இருப்பது எமக்கு விளங்கியது. மேலும், இது டுவிட்டர் விதிகளை மீறியுள்ளதை போன்ற சந்தேகம் எழவே நாம் குறித்த டுவிட்டர் பதிவில் இருந்ததை மீண்டும் டுவிட்டரில் பதிவிட்ட போது இணையத்தில் வைரலாகியுள்ளவாறு முழு டுவிட் பதிவினையும் பதிவிட டுவிட்டர் இடமளிக்காது என்பது கண்டறியப்பட்டது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு என பரவும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தாரா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.