Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    வெள்ளவத்தையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-07-09
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸ

    INTRO :
    கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” எச்சரிக்கை.!!

     ⚠️  ⚠️  ⚠️  ⚠️  

    மன்கொள்ளை.!!

    இலங்கை வாழ் மக்களே மிகவும் அவதானமாக இருக்கும் காலத்தில் 

    நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம்

    இனி இப்படியான சம்பவங்கள் அதிகம் 

    நடக்க வாய்ப்புள்ளது அவதானமாக பாதுகாப்பாக இருக்கவும்.!!

    வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்.!!

    🚔👮👮‍♀️🚷🚷❌🥷🥷🥷🥷❌🚷🚷👮‍♀️👮🚔 “ என இம் மாதம் 02 ஆம் திகதி (02.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    வெள்ளவத்தையில் கொள்ளைச் சம்பவம் என பகிரப்படும் வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த வீடியோவை நாம் நன்கு அவதானித்த போது அது 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என குறித்த வீடியோ சிசிடிவி பதிவிலிருந்த திகதி எமக்கு காட்டியது. இதன் மூலம் இது ஒரு பழைய வீடியோ ஆக இருக்க வேண்டும் என எம்மால் கண்டறியப்பட்டது.

    குறித்த வீடியோவிருந்து நாம் சில புகைப்படங்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து கூகுள் ரிவஸ் இமேஜ் மூலம் ஆய்வினை மேற்கொண்ட போது, அது இந்தியாவில் டில்லியில் கடந்த வருடம் (2021) இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ என கண்டறியப்பட்டது.

    குறித்த சிசிடிவி வீடியோவை கடந்த வருடம் ஜுலை மாதம் 7 ஆம் திகதி Zee News நிறுவனத்தின் குற்றப் பிரிவின் தலைமை ஆசிரியரான Jitender Sharma  டுவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருவரின் வீட்டிற்குள் ஆயுதம் ஏந்திய 04 பேர் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக The Times of India இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

    Link 1 | Achieved link

    இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    Link 1 | Link 2

    கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் என பகிரப்படும் வீடியோ கடந்த 2021 வருடம் இந்தியாவில் டெல்லியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:வெள்ளவத்தையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவமா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-07-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.