
INTRO :
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01
சமூகவலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் உள்ள பிரபல எரிமலை ஒன்றில் திடீர் பயங்கர வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மற்றும் சாம்பல் பல ஆயிரம் அடி உயரத்திற்கு வெடித்துச் சிதறியது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News Flash Tamil” என இம் மாதம் 08 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (08.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02
சமூகவலைத்தளங்களில் “இந்தோனேசிய எரிமலை பேரிடர்: 8 விமான நிலையங்கள் தற்காலிக மூடல்; பயணிகள் தவிப்பு!
#Indonesia #Volcano #VolcanicEruption #VolcanoDisaster #AirportClosed #FlightCancelled #TravelAlert #AviationNews #BreakingNews #srilanka #thinakaran #lka” என இம் மாதம் 08 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (08.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) அதிகாலை இந்தோனேசியாவின் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.
எரிமலை வெடிப்பு காரணமாக வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவானதுடன், எரிமலை பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை காண்கிடைத்தது. BBC news | ABC News
இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி சமூகவலைத்தளத்தில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை அவதானிக்க கிடைத்தது. அதில் சில காட்சிகள் உண்மையான சம்பவத்துடன் தொடர்பு இல்லாத காணொளிகளும் காணக்கிடைத்தன.
Claim 01
“இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு” என சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகின்ற வைரல் காணொளியினை நாம் நன்கு அவதானித்தபோது, அதில் இடம்பெற்றுள்ள மனிதர்களின் அசைவுகள் இயல்பானதாக காணக்கிடைக்கவில்லை.
குறிப்பாக, குறித்த காணொளியில் மக்கள் ஓடும் விதம் மற்றும் அவர்களின் உடல் அசைவுகளில் இயல்புக்கு மாறான காட்சிகள் காணப்பட்டன.
இதனால், இந்த காணொளியை நாம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தமையினால், குறித்த காணொளியினை நாம் செயற்கை நுண்ணறிவினை கண்டறியும் கருவியினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
இந்த வைரல் காணொளியினை நாம் Hive Moderation மற்றும் ZeroGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவிகள் மூலம் ஆய்வினை மேற்கொண்டபோது, இந்த வைரல் காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளி என உறுதியானது.


Claim 02
நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியின் ஒரு பகுதி என கண்டறியக்கிடைத்தது.
குறித்த காணொளியினை பதிவிட்டிருந்த யூடியுப் அலைவரிசையினை நாம் ஆய்வு செய்தபோது, எரிமலை வெடிப்பு தொடர்பாக குறித்த அலைவரிசையில் பல காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த காணொளியின் உரிமையாளரான Martin Rietze என்பவர் எரிமலை வெடிப்பு, மலைகள் மற்றும் வானியல் தொடர்பான சிறப்பு வாய்ந்தவர். mrietze.com
இதே காணொளி கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 25 ஆம் திகதி இந்தோனேசியாவில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு என Newsflare என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளும் எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. News Link
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



