Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறதா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-08-23
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறது என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட


    INTRO :

    Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறது என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link


    சமூகவலைத்தளங்களில்“Emirates – 39 ஆண்டுகள், 700M பயணிகள், 0 Crash! #asiavilletamil #trending #viral #tamilnews #tamilfacts #didyouknow #tamilupdates #tamilcontent #amazingfacts #didyouknowfacts “என இம் மாதம் 07 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (07.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது குறித்து நாம் முதலில் கூகுள் தேடுதளத்தில் emirates flight crash என keyword இட்டு தேடுதல் மேற்கொண்டபோது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 திகதி திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் போயிங் விமானம் தரை இறங்கும் போது மோதுண்டு தீப்பிடித்தமை தொடர்பான செய்திகள் காணக்கிடைத்தது.

    BBC News | emirates.com

    குறித்த விமானம் விபத்து தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    Facebook link

    Skytrax நிறுவனத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமானச்சேவை நிறுவனத்தின் பெயர் பட்டியல் கடந்த ஜுன் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய அதில் சிறந்த விமானச்சேவையில் முதலிடத்தினை கட்டார் விமானச்சேவை நிறுவனம் பெற்றிருந்தது. அதில் எமிரேட்ஸ் விமானச்சேவை நிறுவனம் நான்காம் இடத்தினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. CNN News

    மேலும் நாம் குறித்த பதிவில் பதிவிட்டிருந்த கமெண்டுகளில் பலர் இது போலியான தகவல் எனவும், பதிவிட முன் ஆராய்ந்து பதிவேற்றம் செய்யுமாறு தெரிவித்திருந்தமை காண்கிடைத்தது.

    Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறது என தெரிவித்து பகிரும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறதா..?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-08-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.