Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    வாகன அனுமதி பத்திரத்தின் விபரங்களை குறுந்தகவல் மூலம் பெற முடியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-10-11
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :வாகன அனுமதிப் பத்திரத்தின் விபரங்களை குறுந்தகவல் மூலம் பெற முடியும் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது

    INTRO :
    வாகன அனுமதிப் பத்திரத்தின் விபரங்களை குறுந்தகவல் மூலம் பெற முடியும் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” தவறுதலாக உங்கள் வாகன அனுமதிப் பத்திரத்தை எடுத்துச் செல்ல மறந்து விட்டால் கீழே உள்ள விபரத்தின் படி 1919 க்கு DMT RLS  வாகன இலக்கத்தை Type  செய்து SMS பண்ணினால் வாகன அனுமதி பத்திர இலக்கமும் முடிவடையும் திகதியும் வரும் (Ex: DMT RLS KG – 5093) “ என ஜனவரி மாதம் 05 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டு  (05.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த பதில் உள்ளதை போன்று, வாகன அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் அதன் செல்லுபடியை நிரூபிக்கும் வகையில் அரசாங்க தகவல் நிலையத்தின் மூலம் குறுஞ்செய்தி மூலம் பெறக்கூடிய குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததா என தேடியபோது, அப்படிப்பட்ட தகவல்கள் அடங்கிய எந்த செய்தியையும் எமக்கு கிடைக்கவில்லை.

    மேலும், SMS சேவைகள் மூலம் காரின் இலக்கத்தினை 1919 அரசாங்க தகவல் நிலையத்திற்கு அனுப்பிய போதிலும், அந்த குறியீட்டின் கீழ் வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வரவில்லை, மேலும் அத்தகைய சேவை செயல்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்த அரசாங்க தகவல் நிலையத்திடம் மேற்கொண்ட விசாரணையின் போது, வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக அத்தகைய குறியீடு பொருந்தாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இதனை நாம் உறுதி செய்வதற்காக எமது குழுவினர் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திருமதி சந்திரிகாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது, வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் பெற மத்திய அரசினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்திருந்தாலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் குறித்த தரவுகளை வழங்க  இதுவரை அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    இதற்கமைய வாகன அனுமதிப் பத்திரத்தின் விபரங்களை குறூந்தகவல் மூலம் பெற முடியும் என பகிரப்பட்ட தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:வாகன அனுமதி பத்திரத்தின் விபரங்களை குறுந்தகவல் மூலம் பெற முடியுமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-10-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.