Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இளவரசி குந்தவை ஓவியம் மலேசிய அருங்காட்சியகத்தில் உள்ளதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-10-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இளவரசி குந்தவையின் ஓவியம் மலேசிய அருங்காட்சியகத்தில்  உள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக

    INTRO :
    இளவரசி குந்தவையின் ஓவியம் மலேசிய அருங்காட்சியகத்தில்  உள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய ஓவிய வரைப்படம்! “ என இம் மாதம் 14 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (14.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, oldindianphotos.in என்ற இந்தியாவின் பழங்கால புகைப்படங்கள் இருக்கும் இணையதளத்தில் இந்த படம் கிடைத்தது. 

    அதில், இந்த புகைப்படம் 1872 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். பெண்னொருவர் தங்க நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தனர். Archaeological Survey of India  புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    ஆதாரம் British Library என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பிரிட்டிஷ் லைப்ரரி இணையதளத்தில் இந்த படத்தை தேடினோம். அந்த இணையதளத்தில் நமக்கு இந்த படம் கிடைத்தது.

    bl.uk I Archive

    இதற்கமைய இளவரசி குந்தவையின் ஓவியம் மலேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என பகிரப்பட்ட தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக எமது தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இளவரசி குந்தவை ஓவியம் மலேசிய அருங்காட்சியகத்தில் உள்ளதா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.