Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாறி திருமணம் செய்த அப்ஸா; உண்மை தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-05-24
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாரி திருமணம் செய்த அப்ஸா என ஒரு புகைப்படத்துடன் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த

    INTRO :

    இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாரி திருமணம் செய்த அப்ஸா என ஒரு புகைப்படத்துடன் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாரி திருமணம் முடித்த அப்ஸா

    பெண்ணின் குடும்பம்

    பெண்ணின் பெயர் பாத்திமா அப்ஸா..

    வசிப்பிடம். ஏறாவூர் ஓட்டுபள்ளி வீதீ

    தாய்ன் பெயர்.. நஜிமா

    தகப்பன் பெயர்.. பாரூக்

    சகோதரர்கள் பெயர்.. அஸ்லம் மேலும்

    ஜமால்தீன் ஹஜியின் குடும்பம் படித்த குடும்பம் ஒலுக்கமான குடும்பம்

    மணமகன் குடும்பம்…

    பெயர்.. கந்த சாமி முருகன்

    இடம் ..வந்தாருமுலை

    தொழில்.. கூலிவேலை

    இரு குடும்பத்தின் சம்மதத்துடன் இன்று வந்தாருமுலை ஆலயத்தில் (கோயில்)

    கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

    நிச்சியம் செய்து ஒரு மாதத்தின் பின் நேற்று திருமணம் “ என கடந்த மாதம் 07 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (07.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர்,  வந்தாருமுலை ஆலயம் மற்றும் ஏறாவூரில் அமைந்துள்ள பள்ளியில் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறான எவ்விதமான சம்பவமும் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

    இதனை மேலும் உறுதி செய்ய குறித்த இரு பகுதிகளும் உள்ள ஊடகவியலாளர்களை நாம் தொடர்புகொண்டு மேற்கொண்ட விசாரணையிலும், அவ்வாறான எவ்விதமான சம்பவமும் குறித்த காலத்தில் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

    நாம் இணையத்தில் பரவி வருகின்ற குறித்த புகைப்படத்தினை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அந்த புகைப்படம் இந்தியாவில் கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமசாமி திருக்கோயில் என கண்டறியப்பட்டது.

    dreamstime.com

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாறி திருமணம் செய்த அப்ஸா என பரவும் செய்தி மற்றும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாறி திருமணம் செய்த அப்ஸா; உண்மை தெரியுமா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-05-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.