
INTRO :
அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரத நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” இனி அம்பாரைக்கு ரயில்….! அடுத்த கட்டம் சம்மாந்துறை ஊடாக பொத்துவில்லுக்கு…! “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அம்பாறை மாவட்டத்தில் புகையிரத நிலையம் என தெரிவித்து பகிரப்படும் புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2013 ஆம் ஆண்டு நடந்த தெயட்ட கிருல கண்காட்சியின் போது வடிவமைக்கப்பட்ட மாதிரி புகையிரத நிலையம் என கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது. Facebook | Archived
இது குறித்து எமது குழுவினர் புகையிரத திணைக்களத்தினை தொடர்புக்கொண்டு வினவிய போது, அம்பாறை மாவட்டத்தில் ரயில் நிலையம் இல்லை என எமக்கு உறுதி செய்தார்.
மேலும் இலங்கை புகையிரத திணைக்களத்தில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, 2014 ஆம் ஆண்டு கடைசியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகையிரத பயண வரைப்படத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரத பயணம் இல்லை என்பது உறுதியானது.

மேலும் நாம் இது குறித்து மேலதீக தகவலுக்காக ஊடகவியலாளர் சமன் திசாநாயக்கவிடம் வினவியபோது, 2013 ஆம் ஆண்டு நடந்த தெயட்ட கிருல கண்காட்சிக்காக சுமார் 500 மீற்றர் நீளமுடைய தற்காலிக புகையிரத பாதையும் புகையிரத நிலையமும் அமைக்கப்பட்டு 2 புகையிரத பெட்டிகள் கொண்ட புகையிரதமும் கண்காட்சி நடத்த காலத்தில் இயக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அதனை பராமரிக்காமல் விட்டமையினால் அது பழுதடைந்து விட்டதாகவும், அத்தோடு அம்பாறைக்கு எவ்விதமாக புகையிரதமும் இயக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அம்பாறையில் புகையிரத நிலையம் என பரவும் புகைப்படம் 2013 ஆம் ஆண்டு நடந்த தெயட்ட கிருல கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக புகையிரத நிலையம் என்பது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


