Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெயரில் பரவும் தகவல்கள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-04-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் ஊடக அறிக்கை என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக


    INTRO :

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் ஊடக அறிக்கை என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “வடக்கு கிழக்கில் விடுதலை புலிகளால் அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்த மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி!! “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (08.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Facebook Link | Archived Link

    அதேபோன்று, சமூகவலைத்தளங்களில் “ராஜபக்ஷ நிர்மாணித்த ஹைவேயில் செல்வது முஸ்லிம்களுக்கு ஹராம்! “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (08.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பினை நாம் தொடர்புகொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என்றும் குறித்த பதிவு அவர்களால் பகிரப்படவில்லை என்றும் எமக்கு உறுதி செய்தனர்.

    நாம் இதனை உறுதி செய்து கொள்ள அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தினை ஆய்வு செய்தபோது, அவ்வாறான எவ்விதமான தகவல்களும் பகிரப்படவில்லை என கண்டறியப்பட்டது.

    மேலும் குறித்த தேடலின்போது அவர்களின் வடிவமைப்பு விதமும் இணையத்தில் பகிரப்பட்டிருந்த புகைப்படத்தில் உள்ள வடிவமைப்பு விதமும் ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காணப்பட்டது. 

    அதிலும் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    அதற்கமைய இது ஒரு சிலர் வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தவறான தகவல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரினை கொண்டு பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. 

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெயரில் பரவும் தகவல்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெயரில் பரவும் தகவல்கள் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-04-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.