Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கினாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-05-18
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ2.50 கோடி வழங்கிய அஜித் குமார் என ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவ

    INTRO :
    தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ2.50 கோடி வழங்கிய அஜித் குமார் என ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     Lankapuri என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா நிதி உதவியாக ரூ. 2.5 கோடி வழங்கிய தல அஜித்”  என இம் மாதம் 14 ஆம் திகதி  (14.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் பிழையாக, ரூ.2.50 கோடி என்று குறிப்பிடப்படவே, அதனை உண்மை என்று நம்பி பல்வேறு ஊடகங்களும் ரூ.2.50 கோடி வழங்கியதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளன. 

    இதனை பொதுமக்களும் நம்பி குறித்த செய்தியினை பகிர்ந்து வந்தமை காணக்கிடைத்தது.

    Text

Description automatically generated

    Ajith Manager Suresh Chandra Tweet Link I Archived Link

    இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தவே, அஜித்தின் முகாமையாளரான சுரேஷ் சந்திரா மீண்டும் விளக்கம் அளித்து, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், அவர் தமிழக அரசின் திருத்தப்பட்ட செய்தி அறிக்கையையும் அதனுடன் இணைத்து பகிர்ந்துள்ளார்.

    அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

    Archived Link

    இதுதவிர, திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், நடிகர் அஜித் ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

    Archived Link

    எனவே, தவறுதலாக வெளியிடப்பட்ட  தமிழ்நாட்டு அரசின் அறிக்கையை சரிபார்க்காமல், உடனடியாக, ஊடகங்கள் பிரேக்கிங் நோக்கத்தில் செய்தி வெளியிட, அதனை மற்றவர்களும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர் என்று சந்தேகம் இன்றி தெளிவாகிறது.

    தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட புதிய செய்தி அறிக்கையை கீழே இணைத்துள்ளோம்.

    Text, letter

Description automatically generated

    நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய நடிகர் அஜித் கொரோனா நிவாராண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கினார் என பகிரப்படும் தகவலானது தவறானது என்று கண்டறியப்பட்டது.

    இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கினாரா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-05-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.