Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நடிகர் சரத் பாபு காலமானார் என்ற செய்தி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-05-05
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : நடிகர் சரத் பாபு காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ள

    INTRO :

    நடிகர் சரத் பாபு காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “நடிகர் சரத்பாபு சற்று முன் காலமானார்..

    Read more..

    https://newsinlanka.com/நடிகர்-சரத்பாபு-சற்று-மு/ “ என இம் மாதம் 03 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (03.05.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, அவரின் குடும்பத்தினர் குறித்த செய்தி வதந்தி என தெரிவித்த செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததுள்ள நிலையில், இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

    இதனை தொடர்ந்து அவரின் சகோதரி குறித்த செய்தி பொய்யானவை என்றும், அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, நடிகர் சரத் பாபு காலமானார் என்ற செய்தி வதந்தி என்பது கண்டறியப்பட்டுள்ளதோடு, அவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் சரத் பாபு காலமானார் என்ற செய்தி உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-05-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.