Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-10
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் இலங்கை வந்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவன

    INTRO :
    படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் இலங்கை வந்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰

    Copied 😊 “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (05.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் நடிகர் விஜய் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக விஜயம் செய்துள்ளாரா என ஆய்வினை மேற்கொண்டபோது, தற்போது வரையில் விஜய் இலங்கைக்கு படிப்பிடிப்பிற்காக வருகை தந்தமைக்கான செய்திகள் எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.

    இதனை தொடர்ந்து குறித்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, நடிகர் விஜய் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்லைக்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என பதிவிட்டு குறித்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிந்தமை காணக்கிடைத்தது.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி நெல்லையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். குறித்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியான செய்திகளை நாம் ஆய்வு செய்த போது தற்போது இலங்கைக்கு நடிகர் விஜய் வந்துள்ளதாக பரவும் வீடியோவில் உள்ள உடையினை ஒத்த உடையில் தான் அவர் இருக்கின்றமை காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் வந்ததாக பரவும் வீடியோ நெல்லைக்கு கடந்த வருடம் அவர் மேற்கொண்ட பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தாரா?

    Written By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.