Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நடிகர் விஜய் GOTA HELL என்று ஏந்தினாரா ; உண்மை என்ன தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-15
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நடிகர் விஜய் GOTA HELL என்று பதாகை ஏந்தியதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறு

    INTRO :
    நடிகர் விஜய் GOTA HELL என்று பதாகை ஏந்தியதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” #GotaGoHome #gottagofast #gotago “ என இம் மாதம் 04 ஆம் திகதி (06.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)
    நடிகர் விஜய் பதாகை ஏந்தியது குறித்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த புகைப்படமானது பழையது போன்று எமக்கு தென்பட்டது. இதனை நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது 2020 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் “பழையது” என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பதிவேற்றி இருந்தமை காணக்கிடைத்தது.

    நடிகர் மனோபாலா வெளியிட்ட பழைய படத்தை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில், நடிகர் விஜய் GOTA HELL என்று எந்திய புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    நடிகர் விஜய் GOTA HELL என்று வாசகத்தை ஏந்தியதாக பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் விஜய் GOTA HELL என்று ஏந்தினாரா ; உண்மை என்ன தெரியுமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.