Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்தாரா அநுர ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-08-21
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அநுர அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என


    INTRO :

    தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அநுர அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ இந்த நாய்க்கு அடிங்கடா செருப்பால் : மக்கள் கருத்து

    Mother Country’s News

    தாய் நாட்டின் செய்தி “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (08.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் அநுர குமார திஸாநாயக்கவினால் VAT வரி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தாரா என ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 17 ஆம் திகதி தங்காலையில் நடைபெற்ற பேரணியில் இது தொடர்பாக தமது கருத்தினை அவர் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    தேசிய மக்கள் சக்தியின் முதல் அரசாங்கத்தில் , கல்வி, பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றுக்கான VAT மொத்தமாக அகற்றப்படும் எனவும், குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும், நோய் பரிசோதனைகளுக்கு VAT முற்றிலும் நீக்கப்படும், அதன்படி, மருந்துகள், உணவு மற்றும் கல்வி VAT வரி முற்றாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார, வரி வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும், வரி செலுத்தாத நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன, அவற்றில் மதுபான நிறுவனங்கள் உள்ளன, வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் வரியை வசூலிக்க முடியும். அவர்களுக்கு, அதனால் உணவு, சுகாதாரம், கல்வி என்று வரி விதிக்க தேவையில்லை.

    நாம் குறித்த உரையாடலை முழுமையாக ஆய்வு செய்த போது, உணவு, சுகாதாரம், கல்வி என்ற மூன்றிற்கு மட்டும் வரியை முற்றாக நீக்குவதாக குறிப்பிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மதிப்புக்கூட்டு வரி (திருத்தம்) சட்டம் டிசம்பர் 13, 2023 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, அதன்படி ஜனவரி 01, 2024 முதல் நடைமுறைக்கு வந்த குறித்த திருத்தத்தில் VAT வரி விலக்குகளில் பெரும்பாலானவற்றை நீக்கியது.

    முன்னதாக, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் சுமார் 138 முக்கிய பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது, மேலும் இந்த புதிய திருத்தச் சட்டத்தின் மூலம், கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து, விவசாயம் போன்ற சுமார் 43 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, இப்போதும் கூட, மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அநுர அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்தார் என பரவும் தகவல் தவறானது, என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்தாரா அநுர ?

    Written By: S G Prabu  

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-08-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.