
INTRO :
முதல் முறையாக செயற்கை கருப்பை வசதி என்று வீடியோ மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” “புதிய மனிதா பூமிக்கு வா…” : முதல்முறை செயற்கை கருப்பை வசதி.. 30,000 குழந்தைகளை வளர்க்கும் அதிசயம் ? “ என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (16.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவை ஸ்கிரின்ஷாட் எடுத்து அந்த புகைப்படத்தை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Hashem Al-Ghaili என்ற நபரின் யூடியுப் பக்கத்தில் இந்த வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
மேலும் அவரின் யூடியுப் பக்கத்தில் இது போன்ற பல விஞ்ஞான ரீதியான வீடியோக்கள் இருப்பதை நாம் அவதானித்தோம்.
தொடர்ந்து இது குறித்து அவரின் பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த போது, அதில் இது கற்பனையில் உருவாக்கப்பட்ட வீடியோ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் இந்த EctoLife வசதியை உருவாக்குவதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை, இதுபோல் எதிர்காலத்தில் உருவாகலாம் என்று Hashem Al-Ghaili குறிப்பிட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.
அவர் இதைபோன்று 2020 ஆம் ஆண்டு செயற்கை கருப்பை மூலம் குழந்தை என்ற தொணிப்பொருளில் செய்திருந்த ஒரு வீடியோவும் எமது ஆய்வின் போது எமக்கு கிடைக்கப்பெற்றது.
அத்துடன் அவரின் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் Andrew Shennan என்ற விரிவுரையாளர் இந்த கற்பனை விரைவில் நிஜமாகின்றமைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலையின் மூலம் இது தொடர்பாக விளக்கத்தினையும் அவர் வெளியிட்டிருந்தார்.
மேலும் reuters செய்தி நிறுவனம் Hashem Al-Ghaili தொடர்புகொண்டு வினவியபோது, இது இன்னும் உருவாக்கப்படவில்லை என உறுதி செய்துள்ளார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், செயற்கை கருப்பை வசதி என பகிரப்படும் வீடியோ கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:செயற்கை கருப்பை வசதி என பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Missing context


