Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-05-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் க

    INTRO :

    சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “*இந்த நடனத்தை கவனமாக பாருங்கள். ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்டில் நடனம் ஆடப்படுகிறது*. 

    *இவர்கள் இருவரும் மனித நடனக் கலைஞர்கள் அல்ல, சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரோபோக்கள்*.

     *நடனத்தின் காலம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இந்த நடனத்தைப் பார்க்க டிக்கெட் வாங்க காத்திருக்கும் நேரம் 4 மணி நேரம். 

    இந்த நடனத்தைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 499 யுவான், இது 75 டால்க்சர்களுக்குச் சமம்*.

     *ரோபோக்களின் முகபாவங்கள் கச்சிதமாக உள்ளன, அவற்றை உண்மையான மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துவது கடினம்.* “ என கடந்த மாதம் 29 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (29.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த வீடியோவை நாம் நன்றாக அவதானித்த போது அது மனிதர்கள் நடனம் ஆடுவதை போன்று இருக்கவே, குறித்த வீடியோவில் சில பகுதிகளை நாம் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, 2017 ஆம் ஆண்டு 

    IndianRaga என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.

    வீடியோவில் நடனமாடுபவர்கள் பெயர் சோபியா சாலிங்காரோஸ், இஷா பருப்புடி (Sophia Salingaros, Isha Parupudi) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதில் உள்ள நடன கலைஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நடனமாடியும் உள்ளனர். இது குறித்து அவர்கள் யூடியுப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தனர்.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என பரவும் வீடியோ பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-05-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.