Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    city bus திட்டத்தினை தான் lanka metro transit என மாற்றினார்களா…?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-10-14
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :city bus திட்டத்தினை தான் metro lanka transit என மாற்றினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கி

    INTRO :

    city bus திட்டத்தினை தான் metro lanka transit என மாற்றினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில்“ 2021 இல் இருந்து இருக்கும் city bus திட்டத்தை , metro transit என மாற்றினால் அது நாம ஆரம்பித்ததாக மாறிவிடும்..

    இதை வைத்து 2கிழமைக்கு ஓட்டிடலாம் எப்படி நம் #இராஜதந்திரம் 🤣🤣

    “என இம் மாதம் 09 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (09.10.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று city bus சேவையினை பெயரினை மாற்றி புதிய மெட்ரே பஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளதா என நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

    அதற்கமைய நாம் முதலில் குறித்த மெட்ரோ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பயணிகளுக்கு வசதியினை வழங்கும் வகையில் தாழ் தள வசதியுடன் (low floor bus) கூடிய புதிய பஸ்கள் இயக்கப்பட இ‌‌ந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். 

    இந்த சேவைக்காக புதிதாக பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும், இந்த பஸ்கள் அடுத்த வருடம் ஜூலை அல்லது ஆகஸட் மாதளவில் இந்த பஸ்கள் இலங்கைக்கு கொண்டு வர திட்டம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் குறித்த காலக்கட்டத்தில் இந்த பஸ் போக்குவரத்து சேவையை தொடங்க தேவையான அடிப்படை திட்டங்கள் மற்றும் வசதிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன் ஊனமுற்றவர்களுக்காக விஷேட பஸ்கள் நவம்பர் மாதம் இறுதியில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

    Park & Ride City bus சேவை

    முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் காலக்கட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.இது கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கொட்டாவ பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

    Newsfirst | 

    குறித்த சேவை  இரண்டாம் கட்டமாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டியில், கண்டி புகையிரத நிலையத்திற்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது, இருப்பினும் குறித்த சேவை அரம்பிக்கப்பட்ட இடம் தற்போது தகவல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    தற்போது கண்டி புகையிரத நிலையத்திற்கு முன்னாள் 

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த city bus சேவையானது தற்போது இயக்கப்பட்டு வருகின்றமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

    இதனை உறுதி செய்ய நாம் இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவிய போது அதற்கான பதில்கள் எமக்கு கிடைக்கவில்லை. எமக்கு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதும் இந்த ஆய்வறிக்கையில் நாங்கள் பதிவேற்றம் செய்கின்றோம்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், city bus சேவையினை பெயரினை மாற்றி புதிய மெட்ரே பஸ் சேவையை அறிமுகம் என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:city bus திட்டத்தினை தான் lanka metro transit என மாற்றினார்களா…?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-10-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.