Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-10-14
    1 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலிய

    INTRO :
    பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம் 💔😥 | South African Cricketer David Miller daughter has died 💔

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் மில்லர்  இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்றுள்ளார்.

    தனது மகளின் ஒரு  வீடியோவைப் பகிர்ந்து மகள் பற்றி மிகவும் வேதனையான மரணச் செய்தியை எழுதியுள்ளார். அந்த பதிவில், ” “RIP MY DEAR PRINCESS, உன் மீதான அன்பு எப்போதும் இருக்கும்!” என டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் “உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் உன் முகத்தில் புன்னகையுடனும் சண்டையை வேறு நிலைக்கு கொண்டு செல்வாய். உனக்கு ஒரு  குறும்பு பக்கம் உண்டு. உன் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டாய்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய்! உன்னுடன் ஒரு பயணம் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! RIP” என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (08.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த செய்தி தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, டேவிட் மில்லரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தினை ஆய்வு செய்தோம்.

    அதில் அவர் பதிவிட்டிருந்த ஒரு உருக்கமான வீடியோ பதிவு எமக்கு கிடைத்தது. அதில் ” RIP you little rockstar💗 Love you always!💗 ”

    என்று பதிவிட்டு அதனை பகிர்ந்திருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    https://www.instagram.com/reel/CjdQ_cugnGS/?utm_source=ig_web_copy_link

    அத்துடன் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த ‘Story’ குறித்த குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு, அவரின் இரங்கலினை தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.

    Archived Link

    இந்த பதிவினால் ஊடகங்களும், அவரின் ரசிகர்களும் அவரின் மகள் தான் இறந்து விட்டதாக கருதி செய்தியினை பகிர்ந்துள்ளனர்.

    இது தவறான தகவல் என சில ரசிகர்கள் டுவிட்டர் பதிவினை பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. அதற்கமைய இணையத்தள கிரிக்கெட் ஆய்வாளரான Mufaddal Vohra என்பவர் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகையான Ane இறந்து விட்டதாக பதிவிட்டிருந்தார்.


    Archived Link

    இன்னுமொரு பத்திரிகை விமர்சகர் இது டேவிட் மில்லரின் மகள் அல்ல என பதிவிட்டிருந்தமையும் எமக்கு காணக்கிடைத்தது.


    Archived Link

    டேவிட் மில்லரின் உத்தியோகப்பூரவ இன்ஸ்டெகிராம் பக்கத்தினை ஆய்வு செய்த போது கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த சிறுமியுடன் இருந்த புகைப்படத்தினை பதிவிட்டு, புற்றுநோயோடு போராடும் இந்த குழந்தையை வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

    https://www.instagram.com/p/BR7eYh0AkL1/

    குறித்த செய்தி வைரல் ஆகிய பின்னர் உண்மையினை கண்டறிந்த பல ஊடகங்கள் இது டேவிட் மில்லரின் மகள் அல்ல என்ற செய்தியினை வெளியிட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    Link 1 | Link 2 | Link 3 

    sports.breeze என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் குறித்த செய்தியினை பதிவிட்ட அது தன்னுடைய மகள் அல்ல என டேவிட் மில்லரே அதனை சரிசெய்துள்ளதை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

    தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் தொடர்பாக நாம் தேடிய போது, 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என எமக்கு விவரம் கிடைத்தது.

    cricketerlife | starsunfolded

    இதற்கமைய பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம் என பகிரப்பட்ட செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-10-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.