Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள் உடல் என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-09-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள் உடல் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிர

    INTRO :
    பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள் உடல் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் ” மலேசியாவில், வெள்ளம் காரணமாக கல்லறைகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டியிருந்தபோது, ​​​​10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள்(குர்ஆன் மனனம் செய்தவர்) கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டபோது இறைவன் நம் அனைவருக்கும் நல்ல மரணத்தை தருவானாக.. 🤲🤲🤲 “ என இம் மாதம் 14 ஆம் திகதி (18.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த பதிவிலிருந்த வீடியோவை வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இந்தோனேஷியாவில் பாலித் தீவுகளில் 2002ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 2008ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இமாம் சமுத்ரா (Imam Samudra) என்பவரின் அழியாத உடல் என குறித்த வீடியோ இதற்கு முன்னர் பகிரப்பட்டிருந்த நிலையில் அது போலியானது என அந்நாட்டு பொலிஸ் தரப்பினால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் அந்நாட்டில் சில ஊடகங்களும் குறித்த வீடியோ இமாம் சமுத்ரா உடையது அல்ல என செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    viva.co.id I Archived Link

    இந்தோனேஷிய பொலிஸ் தரப்பில், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தவறானது என்று 2018 ஆம் வெளியிடப்பட்ட வீடியோ பதிவிலிருந்ததை நாம் மொழிமாற்றம் செய்து பார்த்தவேளையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லறையில் இருந்த இமாம் உடல் என்று பரவும் தகவலானது தவராறனது என்றும், இது 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி உயிரிழந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் யாசர் பின் தம்ரின் என்பவரின் உடல் என்று குறிப்பிட்டிருந்தனர். 

    இதற்கமைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள் உடல் என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள் உடல் என பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-09-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.