Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பெரம்பலூரில் கிடைத்தவை ‘டைனோசர்’ முட்டைகளா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-10-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்தியாவில் பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைக்கப்பெற்றதாக சில புகைப்படங்கள் மற்றும் அதை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலர் இதை வைத்து மீம்ஸ் மற்றும் கேலிச் சித்திரங்கள் செய்து பரப்பி வந்தனர். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தே

    INTRO :
    இந்தியாவில் பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைக்கப்பெற்றதாக சில புகைப்படங்கள் மற்றும் அதை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலர் இதை வைத்து மீம்ஸ் மற்றும் கேலிச் சித்திரங்கள் செய்து பரப்பி வந்தனர்.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Srilanka Tamil Online News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்தியாவின் பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!”  என  இம் மாதம் 22 ஆம் திகதி  (22.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பெரம்பலூரில் உள்ள குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் நிறைய கிடைத்துவிட்டதாக, பல்வேறு ஊடகங்களிலும் கடந்த 22, அக்டோபர் 2020 முதல் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி புகைப்படங்களும் பகிரப்பட்டன.

    News7 Tamil Link | Archived Link

    அதற்கு பின்னர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இவை டைனோசர் முட்டை இல்லை. நத்தை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சம் ஆகும். அது நாள்பட நாள்பட படிமம் ஆகி, மண்ணில் புதைந்து, முட்டை போன்ற தோற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனை விஞ்ஞான ரீதியில் Ammonite sediments எனச் சொல்வார்கள்.

    குறிப்பிட்ட குன்னம் பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட தொல்லியல் துறை மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு, இவை டைனோசர் முட்டை இல்லை என தெரிவித்தனர்.

    India Today Link | Archived Link

    இது தொடர்பாக இணையத்தளங்களில் வெளியான செய்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

    DNA India | Archived Link
    Times of India | Archived Link

    எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய பெரம்பலூரில் கிடைத்தவை ‘டைனோசர்’ முட்டைகள் அல்ல அவை நத்தை போன்ற கடல்வாழ் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சம் என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பெரம்பலூரில் கிடைத்தவை ‘டைனோசர்’ முட்டைகளா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-10-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.