Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    புகழ்பெற்ற  வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் காலமானாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-06-24
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையில் புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் காலமானார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானத

    INTRO :
    இலங்கையில் புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் காலமானார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ஜனாஸா அறிவித்தல் 

    புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளர். அப்துல் ஹமீத் அவர்கள் காலமானார்கள்.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். “ என இம் மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (24.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த தகவல் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் நெருங்கிய நண்பர் ‘இந்த தகவல் போலியானது,’ என்று அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் அதில், அப்துல் வீட்டிற்கே சென்று அவரை நேரில் சந்தித்து உரையாடியதோடு, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளமையும் காணக்கிடைத்தது.

    Facebook Link

    இது தொடர்பாக மேலும் நாம் தேடிய போது, குமுதம் பத்திரிக்கையும் குறித்த செய்தி போலியானது என செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Facebook Link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், புகழ்பெற்ற மூத்த வானொலி அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் காலமானார் என பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் காலமானாரா?

    By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-06-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.