
INTRO:
லாஸ் ஏஞ்சல்ஸில் தீ அணைக்கும் விமானம் கம்பத்தில் மோதி விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ #அமெரிக்கா சீரழிகிறது…
லாஸ் ஏஞ்சல்ஸில் தீயை அணைக்கும் போது, கம்பத்தில் மோதி விமானம் விழுந்து எரிந்தது!! ”இம் மாதம் 12 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (12.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி Al Jazeera English என்ற இணைய செய்தி நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ யூடியுப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/kDpiTmfN9MA?si=6D86FEejglH-aN2u” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
குறித்த வீடியோவில் உள்ள தரவு படி இது கடந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி (15.01.2024) சிலி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இது தொடர்பாக வெளியாக செய்தியறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.
மேலும் நாம் கலிபோர்னியா காட்டுத்தீயில் எதும் வீடு தப்பியதா என ஆய்வு செய்தபோது அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தமையும் காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், லாஸ் ஏஞ்சல்ஸில் தீ அணைக்கும் விமானம் கம்பத்தில் மோதி விபத்து என பகிரப்படும் வீடியோ கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி சிலி நாட்டில் நடந்த விமான விபத்து என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:லாஸ் ஏஞ்சல்ஸில் தீ அணைக்கும் விமானம் கம்பத்தில் மோதி விபத்துள்ளானதா ?
Written By: S.G.PrabuResult: Misleading



