Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்ய கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-05-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸ

    INTRO :
    இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     யாழ் இனிது.இசை இனிது.  என்ற பேஸ்புக் கணக்கில் “ ராஜா பாடலோடு Send off கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதிப் பரிசு ❤️❤️❤️”  என இம் மாதம்  27 ஆம் திகதி  (27.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த வீடியோ தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இது மலேசிய நாட்டினை சேர்ந்த ஒருவர் பதிவிட்ட வீடியோ என முதல் கட்ட ஆய்விலிருந்து எமக்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன.

    குறித்த பதிவினை பதிவிட்டிருந்த நபரை நாம் முகநூல் வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து வினவினோம்.

    அவர் அவ்விடத்தில் பாடல் பாடுபவர்கள் அனைவரும் மரணித்த கிருஷ்ணன் பெருமாள் என்ற நபரின் தம்பி, அவரின் பிள்ளைகள் மற்றும் மருமகன்மார்கள் என எமக்கு உறுதி செய்தார்.

    மேலும் மரணித்த கிருஷ்ணன் பெருமாள் என்பவர் சிந்து பைரவி என்ற இசைக்குழுவில் இருந்த கிடார் வாத்திய கலைஞர் என்றும் இவர்கள் மலேசியாவில் தைப்பிங் பெராக் என்ற இடத்தில் வசிப்பவர் எனவும் தெரிவித்தார்.

    குறித்த வீடியோவில் கிட்டார் வாசிப்பவர் மரணித்தவரின் கடைசி மகன் என்றும் அவர் அருகில் இருப்பவர் மரணித்தவரின் கடைசி தம்பி, கிட்டார் வாசிப்பவர் இடது பக்கம் இருப்பவர் மரணித்தவரின் அக்காவின் முதல் மகன் அவருக்கு அடுத்து இருப்பவர் மரணித்த நபரின் மூன்றாவது மகன் எனவும் அவருக்கு அடுத்த படியாக இருப்பவர் மரணித்தவரின் இரண்டாவது மகளின் கணவர் எனவும் கடைசியாக இருப்பவர் அவரின் அக்காவின் மகன் எனவும் எமக்கு அடையாளம் படுத்தினார்.

    இவர்கள் அனைவரும் இசைக்குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்பதாலும், மரணித்த நபருக்கு பிடித்த பாடல்களை அவர்கள் இசைத்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும் இணையத்தில் இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு என பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என எமக்கு தெரியப்படுத்தினார்.

    இது குறித்து அவர் பதிவிட்டிருந்த பேஸ்புக் பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    facebook.com | Archived

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை உண்மையில் சமீபத்தில் காணாமல் போனதாக பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    குறித்த குழந்தையின் புகைப்படம் இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு என பகிரப்படுகின்ற வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்ய கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-05-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.