Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-07-16
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படம் என சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலி

    INTRO :
    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படம் என சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” சோலி முடிஞ்சு “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.07.2022)  பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படம் என வெளியாகியுள்ள புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    மேலும் குறித்த புகைப்படத்தினை நாம் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்த போது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் ஜப்பான் நாட்டில் ஃபுஜி மலைக்கு செல்லும் தருணம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Archived

    இந்தப் பயணத்தின் போது உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் ஜப்பானிய அதிகாரிகள் சிலரையும் கோட்டாபய ராஜபக்ச சந்தித்திருந்தார். அவர்கள் இருவரும் கோத்தபய ராஜபக்சவுக்குப் பின்னால் அமர்ந்திருப்பதை வைரலான படத்திலும் காணலாம்.

    எனவே, இணையத்தில் வைரலான படம் சமீபத்திய புகைப்படம் அல்ல என்பதுடன், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் கோட்டபாய ராஜபக்ஷ இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவதற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும் கண்டறியப்பட்டது.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படம் என பகிரப்படும் புகைப்படம் 2016 ஆம் ஆண்டு  ஜப்பான் சென்ற போது எடுத்த புகைப்படம் என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கோட்டபாய ராஜபக்ஷ விமானத்தில் சிங்கப்பூர் சென்ற புகைப்படமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-07-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.