
INTRO :
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆசிய கிண்ண போட்டியில் குணதிலக்கவின் சட்டை கிழிந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link | website link | Archieved link
சமூகவலைத்தளங்களில் ” சண்டையில் கிழிந்த குணதிலகவின் சட்டை… பானுக மட்டும் இல்லாம இருந்திருந்தா இந்நேரம் ரஷீட் கான் கதை பினிஷ். – வீடியோ உள்ளே “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த பதிவிலிருந்த இணைய செய்தி முழுமையாக வாசித்ததோடு, அதனுடன் இணைக்கபட்டிருந்த வீடியோ இணைப்பினையும் முழுமையாக பார்வையிட்டோம். அதில் தலைப்பில் குறிப்பிட்டதை போன்று எந்த தகவலும் தரப்பட்டிருக்கவில்லை.
மேலும், குறித்த பதிவின் கீழ் பலர் பதிவிட்டிருந்த கமெண்டுக்களில், போலியான தகவலை தர வேண்டாம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான குறித்த கிரிக்கெட் போட்டியில் சம்பவம் தொடர்பான வீடியோவை தேடி பார்த்த போது, குணத்திலக்கவின் சட்டை கிழிந்தமைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை அதில் ரஷித் கான் மற்றும் குணத்திலக்க இடையே வாய் வார்த்தையில் ஏதோ பேசப்படுவது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளித்து இருந்த குணதிலக்க, குறித்த சம்பவத்தின் போது ரஷித் கான் களத்தடுப்பில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரருக்கு ஏதோ தெரிவித்ததை தமக்கென எண்ணி அவரிடம் விசாரித்ததாகவும், அதன் பின்னர் தாம் அவ்விடத்திலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் வேறு எதுவும் அவ்விடத்தில் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தின் போது, குணத்திலக்கவின் சட்டை கிழந்ததாக போலியான தகவலை பரப்பி குறித்த இணைய செய்தி வெளியிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:சண்டையில் குணதிலகவின் சட்டை கிழிந்ததாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: S G PrabuResult: Misleading


