Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் உண்மையா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-11-11
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட

    INTRO :

    சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link | Archived Link

     Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில்“ சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் | வைரலாகும் வீடியோ

    “என இம் மாதம் 8 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (08.11.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும், ஆயினும் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

    நாம் கூகுள் தேடலில் hair cut robot என்ற தேடலினை மேற்கொண்டபோது, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற காணொளியை ஒத்த காணொளியொன்று டிக்டொக் கணக்கில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Tiktok link

    மேலும் அதில் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவினை கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி என பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    அத்துடன் குறித்த காணொளியை hairstyle_story என்ற இனஸ்டெகிராம் பக்கத்திலிருந்து எடுத்து பதிவிட்டிருந்தமையும் குறித்த காணொளியில் பதிவிட்டிருந்தமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.


    ஆகவே நாம் குறித்த இனஸ்டெகிராம் கணக்கினை நாம் ஆய்வு செய்தபோது, அந்த கணக்கில் பதிவிடும் காணொளிகள் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளி என தெரிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Instagram Link 

    அந்த இன்ஸ்டெகிராம் கணக்கினை நாம் ஆய்வு செய்த போது, அதில் பதிவிட்டிருந்த அனைத்து காணொளிகளும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என காணமுடிந்தது.

    இதனை நாம் மேலும் உறுதி செய்ய Ai Detector ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக காணொளி வெளியிட்டிருந்த பிரதான ஊடகமும் குறித்த காணொளியை தமது சமூகவலைத்தளப்பக்கத்திலிருந்து நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் என பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி  என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் உண்மையா..?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-11-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.