Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    புற்றுநோயால் ஹீத் ஸ்ட்ரீக் மரணமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-08-24
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குற

    INTRO :

    சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “புற்றுநோயால் உயிரிழந்த  சிம்பாப்வே கிரிக்கட் முன்னாள் தலைவர்!

    info24News  

    சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக தமது 49 காலாமானார்.

    2000ம் ஆண்டிலிருந்து, 2004ம் ஆண்டுவரை சிம்பாப்வே அணியின் தலைவராக அவர் செயற்பட்டிருந்தார்.

    65 டெஸ்ட் போட்களிலும், 189 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் சிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.

    அத்துடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிம்பாப்வே அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (23.08.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஹென்றி ஒலங்கா அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ஹீத் ஸ்ட்ரீக் உடன் வாட்ஸ் அப் செயலியில் மேற்கொண்ட உரையாடலை பதிவிட்டு குறித்த தகவல் போலியானது என தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.

    https://twitter.com/henryolonga/status/1694212344732357101

    ஸ்ட்ரீக் இறந்துவிட்டதாக ஓலங்கா முதலில் வெளியிட்ட பதிவே, ஸ்ட்ரீக்கின் மரணம் பற்றிய செய்திகளுக்கு வழிவகுத்தது. ஒலங்கா தவிர ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்ஸ், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்றோரும் ஸ்ட்ரீக் இறந்துவிட்டதாக நினைத்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

    ஸ்ட்ரீக் உயிருடன் இருப்பதாக ஒலங்கா X சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த பதிவினை வி.வி.எஸ். லக்ஷ்மன் பகிர்ந்து,  ‘’ஸ்ட்ரீக் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்,’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, புற்றுநோயால் உயிரிழந்த ஹீத் ஸ்ட்ரீக் என பரவிய செய்தி போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:புற்றுநோயால் ஹீத் ஸ்ட்ரீக் மரணமா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-08-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.