Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஐஸ்லாந்து பெண்ணை மணக்கும் வெளிநாட்டினருக்கு பணம் வழங்க முடிவு எடுத்துள்ளதா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-12-31
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதாந்தரம் பணம் வழங்குவதாக அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்ம

    INTRO :
    ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதாந்தரம் பணம் வழங்குவதாக அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் ” iceland-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுதுள்ளது “ என கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (18.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    எமது குழுவினர் இது தொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிவதற்கு முதலில் கூகுளில் பல கிவேர்ட் இனை பயன்படுத்தி தேடிய போது, 2016 ஆம் ஆண்டு இது தொடர்பாக ஐஸ்லாந்து நாட்டு ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    mbl.is | Archived Link

    குறித்த தேடலின் போது, AFP நிறுவனம் மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வறிக்கையும் கிடைக்கப்பெற்றது. அதில் தாய்லாந்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்து தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரான Chamnarn Viravan இது போலியான தகவல் என உறுதி செய்துள்ளார்.

    மேலும் நாம் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவின் இணையத்தளத்தை ஆய்வு செய்த போது, ஐஸ்லாந்து நாட்டில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சதவீதம் சற்று உயர்வாகவே உள்ளது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஐஸ்லாந்து பெண்ணை மணக்கும் வெளிநாட்டினருக்கு பணம் வழங்க முடிவு என பகிரப்படும் செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஐஸ்லாந்து பெண்ணை மணக்கும் வெளிநாட்டினருக்கு பணம் வழங்க முடிவு எடுத்துள்ளதா ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-12-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.