Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-07-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ  பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed

    உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ  பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link

    Mohamed Rizwan என்ற பேஸ்புக் கணக்கில்  ”BREAKING NEWS SRILANKA

    உலகமே திரும்பி பார்க்கவைத்த கருணாவின் செய்தி…😂😂 ” என்று  கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool  பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, இது கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளரால் காமெடியாக வாசிக்கப்பட்ட செய்தி என காணப்பட்டது.

    Google Link

    பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த கருணா அம்மான் வீடியோவிலிருந்து ஒரு புகைப்படத்தினையும் கஜகஸ்தான் செய்தி வாசிப்பாளர் வீடியோவிலிருந்து ஒரு புகைப்படத்தினையும் வைத்து ஆய்வினை நாம் மேற்கொண்டோம். 

    அதில் குறித்த செய்தியினை வாசிக்கும் செய்தி வாசிப்பாளர் அணிந்திருந்த ஆடை மற்றும் அவர் வைத்திருந்த மடிக்கணினியில் உள்ள இலட்சினை மற்றும் செய்தி வாசிப்பாளரின் பின்புறத்தில் இருக்கும் நபர்கள் அனைவரும் ஒத்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

    மேலும் குறித்த இரு வீடியோ பதிவிலுள்ள ஒலியும் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    யுடியூப்பில் நாம் கஜகஸ்தான் செய்தி வாசிப்பாளர் வீடியோ தொடர்பாக தேடியபோது குறித்த வீடியோ பல வருடங்களாக பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

    இதற்கமைய மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகின்றது.

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Conclusion: முடிவு

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று நிரூபித்துள்ளோம்.

    Avatar

    Title:உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-07-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.