Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள் என மஹரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனரா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-06
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள் என மஹரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபே

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள் என மஹரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    மருந்துகளை நன்கொடையாக வழங்குமாறு அபேக்ஷா மருத்துவமனை கோரியதாக பகிரப்பட்ட பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ““எங்களுக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள்” – மகரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள்

    மகரகம அபேக்ஷா (புற்றுநோய்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கொலோஸ்டமி பைகள் (Colostomy Bags) உட்பட அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவது மிகவும் முக்கியமானது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய மருத்துவர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

    இதற்கிடையில், மருத்துவமனையின் நோயாளி பராமரிப்புப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகத் தேவையான சில மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை விரைவாக நன்கொடையாக வழங்குமாறு அபேக்ஷா மருத்துவமனை அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தக் கோரிக்கையின்படி நன்கொடையாக எதிர்பார்க்கப்படும் மருந்துகள்:

    • Tigecycline 50mg ஊசி மருந்துகள்

    • Methotrexate 500mg ஊசி மருந்துகள்

    • Fluorouracil 1g ஊசி மருந்துகள்

    • Methotrexate 2.5mg மாத்திரைகள்

    • Voriconazole 200mg மாத்திரைகள்

    • Chlorambucil 2mg காப்சூல்கள் (Capsules)

    இது தவிர, முதிய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் Colostomy Bags மற்றும் Plates ஆகியவையும் அத்தியாவசிய அறுவை சிகிச்சை உபகரணங்களாக நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    நிபந்தனைகள்:

    நன்கொடைகளை வழங்கும் போது, நன்கொடையாக அளிக்கப்படும் மருந்துகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும், அந்த மருந்துகளுக்கான அசல் ரசீதுகள் (Original Invoices) அதனுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நன்கொடை அளிக்கும் நேரம்:

    இந்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வார நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும் நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்படும்.” என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இலங்கையின் தேசிய புற்றுநோய் நிறுவனம் (NCISL) தனது உத்தியோகபூர்வ இணையத்தளம், சமூக ஊடகங்கள் அல்லது வேறு எந்தவொரு பொது தளங்கள் மூலமாகவும் மேலே குறிப்பிட்ட மருந்துகள் அல்லது ஏனைய பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு கோரி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது எமது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதன் காரணமாக, இது குறித்து தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சுரங்க தொலமுல்ல அவர்களிடம் வினவினோம். தேசிய புற்றுநோய் நிறுவனத்தினாலோ அல்லது வைத்தியசாலை அதிகாரிகளினாலோ இவ்வாறான எந்தவொரு அறிவித்தலோ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லை என்று பணிப்பாளர் எமக்கு தெரிவித்தார்.

    இருப்பினும், தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் பல சமயங்களில் நோயாளர் பராமரிப்புக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள், பயன்பாட்டுப் பொருட்கள் அல்லது பிற பொருட்களை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்து தாமாகவே முன்வந்து வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

    அத்தகைய சந்தர்ப்பங்களில், நன்கொடையாளரின் கோரிக்கையின் தன்மையைப் பொறுத்து, அத்தகைய நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேவைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட நன்கொடையாளருக்கு வைத்தியசாலையால் முறையான வழிகாட்டுதல்களின் கீழ், அத்தகைய விசாரணைகளுக்குப் பதிலாக தகவல்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    ஆனால், எந்தவொரு தகவலும் தேசிய புற்றுநோய் நிறுவனத்தால் உதவி பெறுவதற்காகச் செய்யப்பட்ட பொதுக் கோரிக்கையாகவோ அல்லது முறையீடாகவோ பொருள் கொள்ளப்படக் கூடாது என்றும், இந்த பதிவுகள் அவ்வாறு சித்தரிப்பதால் இவை தவறானவை என்றும் பணிப்பாளர் மேலும் உறுதிப்படுத்தினார்.

    மேலே குறிப்பிடப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள Tigecycline மற்றும் Voriconazole தொற்றுநோய்களுக்கும், ஏனைய சில மருந்துகள் புற்றுநோய்/நோயெதிர்ப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படுபவை என்பதால், இவற்றிற்குத் தட்டுப்பாடு உள்ளதா என்றும் நாங்கள் வினவினோம்.

    எந்தவொரு வைத்தியசாலையிலும் அனைத்து மருந்துகளையும் நூற்றுக்கு நூறு சதவீதம் பூர்த்தி செய்வது சாத்தியமில்லை என்பதால், மருந்துகள் ஏற்ற இறக்கமான அளவுகளில் இருப்பதாகவும், இருப்பினும் நன்கொடையாளர்களின் விசாரணைகளின் போது சிலர் பணமாகவும் மருந்துகளாகவும் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் பணிப்பாளர் இந்த சமூக ஊடகப் பதிவுகள் தவறானவை எனக் கூறி ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவித்தல் ஒன்றையும் விடுத்திருந்தார்.

    நன்கொடை கோரிக்கை தொடர்பான செய்தி குறித்து தேசிய புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட தெளிவுபடுத்தல் கடிதம்

    இந்த கோரிக்கை நடவடிக்கை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமையின் பிரதான காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த திவயின பத்திரிகையின் வெளியாகியிருந்த செய்தி,

    இது குறித்து ‘திவயின’ பத்திரிகையின் ஆசிரியரிடமும் நாங்கள் வினவியதுடன், இன்று (06.10.2026) இது தொடர்பான தெளிவுபடுத்தல் ஒன்று பத்திரிகையில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள் என மஹரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் என பகிரப்படுகின்ற செய்தி தவறானவை என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: மருந்துகளை நன்கொடையாக வழங்குங்கள் என மஹரகம அபேக்ஷா மருத்துவமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனரா..?

    Fact Check By: S.G.Prabu

    Result: Missing Context

    சந்தேகத்துக்குரிய காணொளிகள் மற்றும் படங்களை சரிபார்க்க ஃபேக்ட் கிரஸண்டோவின் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்புமாறு கோரும் பதாகை
    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-06

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.