Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த பதவி நீக்கமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-10-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கமத்தொழில் அமைச்சரான மஹிந்தானந்த அழுத்கமகே பதிவி நீக்கம் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல்

    INTRO :
    கமத்தொழில் அமைச்சரான மஹிந்தானந்த அழுத்கமகே பதிவி நீக்கம் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ”  மஹிந்தானந்த பதவி நீக்கம்! http://www.battinews.com/2021/10/blog-post_560.html . “ என இம் மாதம் 23 ஆம் திகதி (23.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் கமத்தொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது, இவ்வாறு எவ்விதமான செய்தியும் தாம் அறியவில்லை, என எமக்கு உறுதி செய்தார்.

    இது தொடர்பாக, உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது எமது மேலதிக ஆய்விலிருந்து தெரியவந்தது.

    கமத்தொழில் அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திலும் இன்றுவரை மஹிந்தானந்த அவர்களே அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    agrimin.gov.lk | Archived

    மேலும் நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்ட மஹிந்தானந்த அழுத்கமகே கமத்தொழில் அமைச்சர் என்று அடையாளப்படுத்தியிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது. 

    Facebook

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த பதவி நீக்கம் என்ற செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த பதவி நீக்கமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-10-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.