Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மெலிபன் சாக்லேட் பிஸ்கட் 400 கிராம் பாக்கெட் விலை குறைக்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-08-31
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :மெலிபன் சாக்லேட் பிஸ்கட்டின் 400 கிராமின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ

    INTRO :
    மெலிபன் சாக்லேட் பிஸ்கட்டின் 400 கிராமின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” வாங்கல சாப்பிடல விலை குறையுது ரிப்பீட்டு… வாங்கல சாப்பிடல விலை குறையுது ரிப்பீட்டு “ என ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி (27.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த தகவல் தொடர்பாக விசாரிக்க முதலில் நாம் மெலிபன் உயர் நிர்வாக அதிகாரியினை தொடர்புக்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்படுவதை போன்று  400 கிராம் சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட்டின் விலை ரூ.600 என்றும் குறித்த விலையில் எவ்விதமான மாற்றமும்  இல்லை என்றும் தெரிவித்தார். தள்ளுபடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதாகவும், சில புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் எமக்கு சுட்டி காட்டியிமை குறிப்பிடத்தக்கது.

    பிரபலமான பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறிய அளவிலான கடைகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டாலும், சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று 50% தள்ளுபடியை ஒருபோதும் வழங்குவதில்லை என்று மெலிபனின் உயர் நிர்வாகம் எமக்கு தெரிவித்தது.

    பல்பொருள் அங்காடிகளில் (Super Market) தள்ளுபடிகள் கோரப்பட்ட பின்னர், எமது சந்தைப்படுத்தல் அணி அவற்றைக் குறித்து கையாளும் என்றும், சூப்பர் மார்க்கெட்டுகளில் Loyalty Card போன்ற முறைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும், இதற்கு முன்பும் இதே பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

    மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தினரை நாங்கள் இதற்கு முன்பு தொடர்புகொண்டு விசாரித்த போது பிஸ்கட் பைக்கற்றுக்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

    Cargills Food City

    இணையத்தில் வைரலாகியுள்ள புகைப்படத்தில் பலர் இது கார்கில்ஸ் புட் சிட்டிக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளனர், எனவே நாங்கள் அதன் சந்தைப்படுத்தல் துறையிடம் இது குறித்து விசாரித்தோம், அவர்கள் தங்கள் Loyalty வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட அட்டையின் பெயர் Rewards என்றும் எந்த நேரத்திலும் அது Loyalty காட் என்று குறிப்பிடப்படவில்லை எனவும் மேலும் அது கார்கில்ஸ் ஃபுட் சிட்டியின் ஒரு கிளை அல்ல என்றும் எமக்கு உறுதி செய்தனர்.

    மேலும், அவர்கள் வழங்கும் தள்ளுபடி 30%க்கு மேல் இல்லை என்றும், ஒவ்வொரு வாரமும் பிஸ்கட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவதாகவும், அதன்படி ஒரே மாதிரியான 2 பிஸ்கட்கள் கிடைக்கும் போது ஒரு பைக்கற்றில் 25% தள்ளுபடி வழங்குவதாகவும் காகில்ஸ் நிறுவனத்தின் Rewards அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே குறித்த விலைக்கழிவு கிடைக்கப்பெறும் எனவும் சுட்டிக்காட்டினர்.

    கீல்ஸ் சுப்பரில் மளிகை வகை மேலாளர் (Grocery Category)

    பல சமயங்களில் பிஸ்கட் தயாரிப்புகளுக்கு மட்டுமின்றி மற்ற பொருட்களுக்கும் விளம்பர நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படுவதால், கீல்ஸ் நிறுவனம், தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து தள்ளுபடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் குறித்த சலுகைகள் விளம்பர காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்று கூறினார்.

    சதொச

    சதொச கிளை ஒன்றின் உயர்மட்ட நிர்வாகத்திடம் இவ்வளவு பெரிய தொகை தள்ளுபடி வழங்கப்படுகிறதா என்றும் கேட்டோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், சதொச நிறுவனத்தினால் எந்த அட்டையும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

    மேலும், பிஸ்கட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தள்ளுபடி வழங்கி வருவதாகவும், அதிகபட்சம் 15%-20% வரை தான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    எனினும் மேற்படி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் ரூ.552/- என்ற விலையில் பரவியிருந்தமை எமது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

    Facebook | Archived Link

    புகைப்படத்தின் படி, Maliban Chocolate Cream Biscuits  400 கிராம் பைக்கற்றின் விலை ரூ.600 மற்றும் லாயல்டி கார்டு வைத்திருப்பவர்களுக்கு அந்த பைக்கற்று ரூ. 552க்கு விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 8% மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மேற்கண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டு தற்போது பகிரப்பட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மெலிபன் சாக்லேட் பிஸ்கட் 400 கிராமின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:மெலிபன் சாக்லேட் பிஸ்கட் 400 கிராம் பாக்கெட் விலை குறைக்கப்பட்டதா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-08-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.