Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட செல்ல மாட்டேன் என மொயின் அலி தெரிவித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-06-10
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நபிகள் நாயகத்தை குறித்து இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மொயின் அலி செல்லமாட்டேன் என தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்ம

    INTRO :
    நபிகள் நாயகத்தை குறித்து இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மொயின் அலி செல்லமாட்டேன் என தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்குறித்து இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் , நான்கிரிக்கெட்விளையாட

    இந்தியாவிற்கு செல்லமாட்டேன் 

    ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன் மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களையும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் . இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்  மொயின் அலி 

    -Respect ❤🔥 “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட செல்ல மாட்டேன் என மொயின் அலி தெரிவித்ததாக பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது , நபிகள் நாயகம் பற்றி இந்தியா அவதூறான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதத்தில் பேசினர். அவர்களையும் கூட பாரதிய ஜனதா கட்சி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தமையும் எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

    நாம் முதலில் மொயின் அலியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, 2014 ஆம் ஆண்டு டுவிட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒரு டுவிட்டர் கணக்கு எமக்கு கிடைக்கப்பெற்றது குறித்த டுவிட்டர் கணக்கும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாத்திற்கு பின்னர் பாவணையில் இல்லை. (@MoeenaliAli)

    இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் மொயின் அலியின் டுவிட்டர் கணக்கிற்கு டுவிட் பதிவினை இட்டிருந்தனர். குறித்த கணக்கினையும் ஆய்வு செய்த போது அதும் தற்போது பாவணையில் இல்லை என கண்டறியப்பட்டது. ( @MoeenAli )

    இணையத்தில் பகிரப்படும் பதிவில் உள்ள ட்விட்டர் கணக்கினை தேடி பார்த்தோம். @Moeen_Ali18 என்று அதன் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முகவரியை ட்விட்டரில் தேடிய போது அந்த கணக்கு முடக்கப்பட்டது (Account suspended) என்று வந்தது. மேலும், மொயின் அலியின் உண்மையான ட்விட்டர் பக்கத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்தது.

    தொடர்ந்து தேடிய போது “இது மொயின் அலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை” என்று குறிப்பிட்டு இந்த ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வந்திருப்பதாக செய்திகள் கிடைத்தன. மே மாதத்தில் இந்த கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், 10 ட்வீட்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதில் தகவல் நமக்கு கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடலில் இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட செல்ல மாட்டேன் என மொயின் அலி தெரிவித்தார் என பகிரப்படும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை  வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட செல்ல மாட்டேன் என மொயின் அலி தெரிவித்தாரா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-06-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.