
INTRO :
சக்திமான் தொலைகாட்சி தொடர் கதையின் நடிகரான முகேஷ் கண்ணா புகைப்படத்தினை வைத்து ராஜூ ஸ்ரீவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்தார் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” #ஆழ்ந்த_இரங்கல்..
#சக்திமான்..
😭சக்திமான் நடிகர்
ராஜூ ஸ்ரீவஸ்தவா அவர்கள்
சற்று முன் மாரடைப்பால் காலமானார்😢
😭அவர்களின் ஆத்மா சாந்தி
அடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்🙏
😭2000 த்தில் எங்கள் மனங்களில்
குடி கொண்டிருந்த #சக்தீமான்…
அவரின் கதைகளும் நடிப்பும் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்…
90’ஸ் கிட்ஸ்களின் டிவி ஹிரோ “ என இம் மாதம் 23 ஆம் திகதி (23.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த பதிவில் குறிப்பிட்டதை போன்று சக்திமான் நடிகர்
ராஜூ ஸ்ரீவஸ்தவா மரணமானாரா என்று கூகுளில் தேடியபோது, குறித்த செய்தி உண்மை என எம்மால் கண்டறிய முடிந்தது.

zeenews.india.com| Archived link
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வேளையில் செப்டம்பர் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரும் சக்திமான் தொடர்கதையில் நடித்தமையால் இவருக்கு பதிலாக சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா படத்தை வைத்து தவறான தகவல் பரப்பியிருப்பது எம்மால் கண்டறியப்பட்டது.
நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உயிரிழப்புக்கு சக்திமான் தொடர்கதையின் கதாநாயகனாக நடித்த முகேஷ் கன்னா இரங்கல் தெரிவித்திருந்தார்.
zeenews.india.com| Archived link

இதற்கமைய சக்திமானில் நடித்த ராஜூ ஸ்ரீவஸ்தவா மரணத்தை சக்திமானாக நடிகர் முகேஷ் கண்ணாவின் புகைப்படத்தினை பயன்படுத்தி தவறாக பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா மாரடைப்பால் உயிரிழந்தாரா?
Fact Check By: S G PrabuResult: Misleading


