Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>கட்டார்</strong><strong> </strong><strong>உலகக் கிண்ண கால்பந்து மைதானத்தில் நடந்த தொழுகையா இது  ?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கட்டார் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் என ஒரு மைதானத்தில் தொழுகை இடம்பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த

    INTRO :
    கட்டார் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் என ஒரு மைதானத்தில் தொழுகை இடம்பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” மாஷாஅல்லாஹ் ❤🥰 , கத்தார் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தில்….

    #FIFAWorldCup

    #FIFAWorldCup2022

    #fifaqatar2022

    #FIFAWorldCupQatar2022 “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (22.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.


    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது , அந்த மைதானத்தில் “KAZAN” என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே நாம் கூகுளில் Kazan stadium என்று தேடியபோது, அது ரஷ்யாவில் அமைந்திருந்த மைதானம் என எமக்கு காணக்கிடைத்தது.

    ஆகவே நாம் குறித்த வீடியோவில் உள்ள மைதானமும், இணையத்தில் எமக்கு கிடைத்த மைதானமும் ஒரே மைதானமா என கண்டறிய கூகுள் புகைப்படத்தினை உதவியுடன் ஆராய்ந்த போது, இணையத்தில் வைரலாகியுள்ள மைதானமும், ரஷ்யாவில் நமக்கு கிடைக்கப்பெற்ற மைதானமும் ஒன்றே தான் என கண்டறிய முடிந்தது.

    Link

    நாம் யூடியுப் தளத்தில் kazan stadium prayer என தேடிய போது, கட்டார் மைதானத்தில் என பரவுகின்ற அதே வீடியோ 3 வருடங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்த வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.

    மேலும் இந்த முறை கட்டாரில் நடைப்பெறும் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் நடக்கும் மைதானங்களில் Kazan என்ற பெயரில் எவ்விதமான மைதானமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ( Link )

    இதற்கமைய கட்டார் உலகக் கிண்ண கால்பந்து மைதானத்தில் நடந்த தொழுகை வீடியோ என பரவி வருகின்ற குறித்த வீடியோ எடுக்கப்பட்ட மைதானம் ரஷ்யாவில் அமைந்துள்ளதோடு, இது சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கட்டார் உலகக் கிண்ண கால்பந்து மைதானத்தில் நடந்த தொழுகையா இது ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.