Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில் பாடினரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-06-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில்  பாடியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது கு

    INTRO :
    அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில்  பாடியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” நியூசிலாந்து அரசாங்கம் ஒரு “தேசியபாடலை” உருவாக்கி அப்பாடலை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இசைஅமைத்து பாடுகிறார்கள். இதன் சிறப்பு “அல்லாஹ்”-வின் திருப்பெயர்கள் 99 ஆகும். இந்த பெயர்களை இனிமையான குரலில் படும்பொழுது கண்ணீர் வருகிறது… சூப்பர்நியூசிலாந் து அரசு….. 👇 “ என கடந்த மாதம் 08 ஆம் திகதி (08.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில் பாடினர் என பரவுகின்ற வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த வீடியோவில் முதலில் தென்பட்ட இலச்சினை தொடர்பாக ஆய்வு செய்த போது, இது துருக்கி நாட்டை சேர்ந்த ஊடக நிறுவனம் என கண்டறியப்பட்டது. TRT AVAZ

    மேலும் குறித்த வீடியோவில் காணப்பட்ட Saraybosna Fatih Sultan என்ற watermark இனை கூகுளில் தேடியபோது, குறித்த நிகழ்ச்சியின் முழு வீடியோவும் எமக்கு கிடைக்கப்பட்டது.

    Dailymotion தளத்தில் TRT İzle என்ற அலைவரிசையின் கீழ் இது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பான செய்திகளை நாம் ஆய்வு செய்த போது, Hagia Irene Museum என்ற இடத்தில் Fatih Sultan Mehmet Choir மூலம் 2011 ஆம் வருடம் வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்ற செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

    sabah.com.tr | Archived

    நாம் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ள வீடியோவில் உள்ள இடத்தினையும் Hagia Irene Museum இடத்தினை ஒப்பிட்டு பார்த்த போது குறித்த இரு இடங்களும் ஒன்று என்பது கண்டறியப்பட்டது.

    எமது ஆய்வின் அடிப்படையில் இது 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது துருக்கி நாட்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் மேற்கொண்ட தேடலின் போது, அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில் பாடினர் என பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில் பாடினரா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-06-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.